வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (15)
Share
வடலுார்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 7:30 மணியளவில், தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி

வடலுார்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150வது ஜோதி தரிசன விழாவையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



latest tamil news



கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 150வது தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 7:30 மணியளவில், தருமசாலை மற்றும் ஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், 10:30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.


latest tamil news



இன்று தைப்பூச தினத்தையொட்டி, காலை, 6:00 மணிக்கு ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10:00, மதியம், 1:00, இரவு, 7:00, 10:00 மற்றும் 29ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கும், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

இன்று, தருமசாலை பிரசங்க மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில், ஊரன் அடிகளார் உள்ளிட்டோர் சொற்பொழிவு நிகழ்த்துகின்றனர். மாலை, 6:00 மணியளவில், மகாமந்திரம் ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக, அரசின் வழிகாட்டுதலோடு விழா நடக்கிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X