பொது செய்தி

இந்தியா

செங்கோட்டை கலவரம்; தீப் சித்து மீது எப்.ஐ.ஆர் பதிவு

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: பஞ்சாப் நடிகர் தீப் சித்து மீது செங்கோட்டைக் கலவரம் தொடர்பாக டில்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதையொட்டி கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பஞ்சாப் நடிகரான தீப் சித்து, தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். ஏற்கனவே இவர்
ActorDeepSidhu, RedFort, FIR, Accused, InstigatingProtesters, நடிகர் தீப் சித்து, செங்கோட்டை, விவசாயிகள், கலவரம், எப்ஐஆர்

புதுடில்லி: பஞ்சாப் நடிகர் தீப் சித்து மீது செங்கோட்டைக் கலவரம் தொடர்பாக டில்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதையொட்டி கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பஞ்சாப் நடிகரான தீப் சித்து, தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். ஏற்கனவே இவர் விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற விரும்பிய போது விவசாயிகள் சங்கத்தினர் இவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், பேரணியை முன்கூட்டியே துவக்கிய தீப் சித்து, டிராக்டர் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுத்த வழிகளில் செல்லாமல், மாற்று வழிகளில் பேரணியை நடத்தினார்.


latest tamil news


இப்படியாக போலீசாரின் தடுப்புகளை மீறி தனது ஆதரவாளர்களுடன் சித்து செங்கோட்டை வரை சென்றார். பின்னர், செங்கோட்டைக்குள் புகுந்த அவரது ஆதரவு விவசாயிகள், அங்கு சீக்கிய மதக்கொடியை ஏற்றினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தீப் சித்துவும் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக தீப் சித்து மற்றும் ஆதரவாளர்கள் மீது டில்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி போலீஸ் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரைத் தாக்குதல், கொலை முயற்சி, கலவரத்தை தடுக்கும் ஊழியர் மீது தாக்குதல், பொது இடத்தை சேதப்படுத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202118:00:57 IST Report Abuse
J.V. Iyer எல்லா போராட்டங்களும் கலவரத்தில்தான் முடிந்திருக்கின்றன. இது நன்கு தெரிந்தும் நீதிமன்றம் இதற்கு தடை விதிக்காதது வியப்பளித்திருக்கிறது. நீதி மன்றங்கள் கலவரங்களை தடுக்கவேண்டும். நடந்த பிறகு விசாரணை செய்வதற்கு அல்ல.
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
28-ஜன-202114:17:36 IST Report Abuse
ANTONYRAJ Sankaseshan mumbai அவர்களுக்காக இந்த பதிவு. போலி விவசாய போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கதவை தட்டும்போது சத்தமில்லாமல் கதவை திறந்துவிட்டு மத்திய அரசு மௌனம் காத்ததே, பின்நாளில் இவர்கள் அதே கதவை தட்டும் போது நீதிமன்றமே தானாக கதவை இழுத்து சாத்திக்கொள்ளும் என்பது மத்திய அரசுக்கு முன்பே தெரிந்த கதைதான்.கலவரம் வெடித்தது, அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுத்தாயிற்று, நீதிமன்றமும் கதவை சாத்திக் கொண்டது.இது பத்தாது என்று அமித்ஷா வேறு "அவசர" ஆலோசனைக் கூட்டம்(சாதாரண கூட்டம் என்றாலே அவனவனுக்கு வயித்த கலக்கும்) என்றுதான் சொன்னார்.மெயின் பிக்சர் பாக்குறதுக்குள்ள 60 நாள் தொடர் போராட்டத்தை வாபஸ் பண்ணிட்டு ஓடிட்டாய்ங்க.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஜன-202113:57:20 IST Report Abuse
sankaseshan அந்தோணி ராஜ் BJP ஏன் கலவரத்தை தூண்டனும் புரியலையே . Bigu யாருக்கு கைக்கூலி ? தீப் சித்து வுக்கும் நவஜோ த் துவுக்கும் தொடர்பு உண்டா ? நவஜோ த் வாயை திறக்கவில்லை இன்றுவரை .
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
28-ஜன-202115:57:50 IST Report Abuse
Rajஏற்கெனவே செய்தது போல், விவசாயிகள் மேல் பழியை போட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர .......
Rate this:
Raj - Namakkal,சவுதி அரேபியா
28-ஜன-202115:59:48 IST Report Abuse
Rajதீப் சித்து கடந்த தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவாக பிரசசாரம் செய்தவன். இவன் மோடி உடன் இருக்கும் படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வருகிறது...
Rate this:
Raj - nellai,பஹ்ரைன்
28-ஜன-202119:27:42 IST Report Abuse
Rajஉண்மை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X