புதுடில்லி: இத்தாலியில் உள்ள இந்திய துாதரகத்தை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடியது தொடர்பாக, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான, இத்தாலியின் தலைநகரம், ரோம். இங்குள்ள இந்திய துாதரகத்தை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடினர். குடியரசு தினத்திற்கு முந்தைய இரவில் நடந்த இந்த வெறியாட்டத்தின் போது, துாதரகத்தில், காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. சுவர்களில் ஆங்காங்கே, 'காலிஸ்தான் வாழ்க' என, எழுதப்பட்டது. இதன், 'வீடியோ' சமூக ஊடகங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வன்முறை குறித்து, மத்திய அரசு, இத்தாலி அரசுக்கு தன் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்து உள்ளது. இந்திய துாதரகத்தையும், துாதரக அதிகாரிகள், ஊழியர்களை பாதுகாக்கும் பொறுப்பு, இத்தாலி அரசுக்கு உள்ளதை சுட்டி காட்டியுள்ள, மத்திய அரசு, வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை, பிரிட்டன் அரசு சிறப்பாக கையாண்டதையும், இத்தாலி அரசின் கவனத்திற்கு, மத்திய அரசு எடுத்துச் சென்றதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE