சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடம் திறப்பு விழாவிற்கு வந்த முதியவர் பலி

Added : ஜன 28, 2021
Share
Advertisement
சென்னை : ஜெ., நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த நபர், நடைபாதையில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை மெரினா கடற்கரையில், ஜெ., நினைவிடத்தை நேற்று காலை, முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொண்டர்கள் சென்னை வந்திருந்தனர்.இந்நிலையில், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்,

சென்னை : ஜெ., நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த நபர், நடைபாதையில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில், ஜெ., நினைவிடத்தை நேற்று காலை, முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தொண்டர்கள் சென்னை வந்திருந்தனர்.இந்நிலையில், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், நட்சத்திர ஓட்டல் முன் உள்ள நடைபாதையில், அ.தி.மு.க., கரை வேட்டி கட்டி வந்த, 75 வயது மதிக்கதக்க ஆண் நபர் இறந்து கிடந்தார்.மயிலாப்பூர் போலீசார், அவரது உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவரின் இடது தாடையில், சிறு காயம் ஏற்பட்டு ரத்த கசிவு இருந்தது.முதற்கட்ட விசாரணையில், ஜெ., நினைவிட திறப்பு விழாவிற்கு வந்தவர் என, தெரியவந்துள்ளது. அவர் யார் என்ற விபரங்கள் தெரியவில்லை.இதனிடையே, நெல்லையை சேர்ந்த, மூக்கையன், 60 என்பவர், ஜெ., நினைவிட திறப்பு விழாவிற்காக சென்னை வந்தார். சைதாபேட்டை அருகே வந்தபோது, மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X