மஹா., கேரளாவில் தான் நாட்டின் 70 சதவீத கொரோனா பாதிப்பு: ஹர்ஷ்வர்தன்| Dinamalar

மஹா., கேரளாவில் தான் நாட்டின் 70 சதவீத கொரோனா பாதிப்பு: ஹர்ஷ்வர்தன்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (19)
Share
புதுடில்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகள் மஹாராஷ்டிரா, கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1.07 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 1.03 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டாலும், 14 ஆயிரம் பேர்
CovidCases, India, HarshVardhan, கொரோனா, பாதிப்பு, இந்தியா, ஹர்ஷ்வர்தன்,

புதுடில்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகள் மஹாராஷ்டிரா, கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1.07 கோடி பேர் பாதிக்கப்பட்டு, 1.03 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டாலும், 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்புகளில் 70 சதவீத பாதிப்பு மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் உள்ளன. பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


இந்தியாவின் 21 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதேபோல், 147 மாவட்டங்களில் கடந்த 7 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X