விவசாய சங்க தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த பேரணியில் வன்முறை நிகழ்ந்ததை தொடர்ந்து, சில சங்க தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை போலீசார் பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும்.விவசாயிகள் பேரணி வன்முறையாக மாறியது தொடர்பாக சமய்பூர் பட்லி போலீஸ் நிலையத்தில், மேதா பட்கர், பூடா
விவசாய சங்க தலைவர்கள், லுக் அவுட், நோட்டீஸ்,

புதுடில்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த பேரணியில் வன்முறை நிகழ்ந்ததை தொடர்ந்து, சில சங்க தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை போலீசார் பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும்.

விவசாயிகள் பேரணி வன்முறையாக மாறியது தொடர்பாக சமய்பூர் பட்லி போலீஸ் நிலையத்தில், மேதா பட்கர், பூடா சிங் தர்ஷன் பால், ராகேஷ் திகாயத், ராஜிந்தர் சிங், பல்பிர் சிங் ரஜேவல் மற்றும் யோகேந்திர யாதவ் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் என 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


latest tamil news


அதில், குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைக்கும் வகையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்லாமல், வேறு பாதையில் திட்டமிட்டே சென்று வன்முறையில் ஈடுபட்டனர். கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக ஒரே இடத்தில் கூடினர் என தெரிவித்துள்ளனர். கலவரம் தொடர்டாக, 25 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்த போலீசார், 19 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சில விவசாய சங்க தலைவர்களுக்கு எதிராக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் பாஸ்போர்ட் முடக்கப்படும்.


நோட்டீஸ்



latest tamil news


இதனிடையே, டிராக்டர் பேரணி தொடர்பாக, ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்பட்டதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு, பாரதிய கிஷான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத்திற்கு நோட்டஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அந்த நோட்டீசில், வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும். இந்த நோட்டீசுக்கு 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து, அதனை, போராட்டம் நடக்கும் காசிப்பூர் எல்லையில் ராகேஷ் திகாயத் தங்கியுள்ள டென்ட்டில் ஒட்டி சென்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202118:10:17 IST Report Abuse
J.V. Iyer இவர்களை சும்மா விடாதீர்கள். கலவரம் செய்த எல்லோரையும் தண்டிக்க ஏற்பாடு செய்யுங்க எசமான்.
Rate this:
Cancel
Rajagiri - Guindy,இந்தியா
28-ஜன-202117:29:55 IST Report Abuse
Rajagiri செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டியதில் தவறில்லை . செய்தது யார் ..தூண்டியது யார் .பின்னணி ..முன்னணி எல்லாம் வெளிவந்தால் "கள்ளன் கப்பலிலில் தன்னே " என்ற கதையாகிவிடும் குற்றவாளிகள் வெளிக்கொணரவாய்ப்பு இருக்காது .
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
28-ஜன-202116:44:59 IST Report Abuse
மன்னிப்பு விவசாயிகளுக்கு அவுட் லுக் நோட்டிசா? எப்பவும் இந்த தொழில் அதிபர்களுக்கு தானே அவுட் லுக் நோட்டீஸ் தருவார்கள்? அப்ப போராட்டம் செய்தது விவசாயிகள் இல்லையா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜன-202118:44:14 IST Report Abuse
madhavan rajanஇன்னுமா போராட்டக்காரர்களை விவசாயிகள் என்று நம்புகிறீர்கள்? அந்த பிட்ட இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் போடறது?...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஜன-202100:26:29 IST Report Abuse
தமிழவேல் பேங்க்ல கடன் வாங்கிட்டு கட்டாம இருந்தவனுவோளுக்கு மட்டும் கிடையாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X