புதுடில்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடந்த பேரணியில் வன்முறை நிகழ்ந்ததை தொடர்ந்து, சில சங்க தலைவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை போலீசார் பிறப்பித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும்.
விவசாயிகள் பேரணி வன்முறையாக மாறியது தொடர்பாக சமய்பூர் பட்லி போலீஸ் நிலையத்தில், மேதா பட்கர், பூடா சிங் தர்ஷன் பால், ராகேஷ் திகாயத், ராஜிந்தர் சிங், பல்பிர் சிங் ரஜேவல் மற்றும் யோகேந்திர யாதவ் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் என 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதில், குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைக்கும் வகையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்லாமல், வேறு பாதையில் திட்டமிட்டே சென்று வன்முறையில் ஈடுபட்டனர். கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக ஒரே இடத்தில் கூடினர் என தெரிவித்துள்ளனர். கலவரம் தொடர்டாக, 25 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்த போலீசார், 19 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சில விவசாய சங்க தலைவர்களுக்கு எதிராக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் பாஸ்போர்ட் முடக்கப்படும்.
நோட்டீஸ்

இதனிடையே, டிராக்டர் பேரணி தொடர்பாக, ஏற்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயல்பட்டதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு, பாரதிய கிஷான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத்திற்கு நோட்டஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அந்த நோட்டீசில், வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும். இந்த நோட்டீசுக்கு 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து, அதனை, போராட்டம் நடக்கும் காசிப்பூர் எல்லையில் ராகேஷ் திகாயத் தங்கியுள்ள டென்ட்டில் ஒட்டி சென்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE