புதுடில்லி: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் இடம்பெறும் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை(ஜன.,29) துவங்குகிறது. பிப்.,1 அன்று இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், நாளை பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பார்லிமென்ட்டில் நாளை இடம்பெறும் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இல்லாமல், வேளாண் மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்றியதே, ஜனாதிபதி உரையை புறக்கணிப்பதற்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE