பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த மூதாட்டி விடுதலை

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: பாஸ்போர்ட் தொலைந்ததால் பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி ஒருவர் விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஹசினா பேகம், 65, என்பவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருக்கும் தனது கணவரின் உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனது
WomanFreed, PakistaniJail, Aurangabad, Passport

புதுடில்லி: பாஸ்போர்ட் தொலைந்ததால் பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி ஒருவர் விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஹசினா பேகம், 65, என்பவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருக்கும் தனது கணவரின் உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக தனது பாஸ்போர்ட்டை ஹசினா தொலைத்துவிட்டார். இதனால், இந்தியா திரும்ப முடியாமல் தவித்த அவரை, பாக்., அதிகாரிகள் வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தனர். அவரை மீட்க இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பயனில்லாமல் போனது.


latest tamil news


இந்நிலையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதிகளை சமீபத்தில் பாகிஸ்தான் அரசு விடுவித்தது. இதனடிப்படையில், ஹசினா பேகமும் விடுதலை செய்யப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பினார். அவரை அவுரங்காபாத் போலீசார் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்றனர்.

இது குறித்து அவர் கூறியதாவது: கணவரின் உறவினரை பார்க்க பாக்., சென்றபோது என் பாஸ்போர்ட் தொலைந்ததால், என்னை சிறையில் அடைத்தனர். நான் அப்பாவி, என்னை விட்டுவிடுங்கள் என மன்றாடி கேட்டும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.


latest tamil news


நான் இப்போது சொர்க்கத்துக்கு திரும்பியதுபோல் உணர்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் பல்வேறு தடைகளையும், சோதனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். என்னை விடுதலை செய்வதற்காக முயற்சி எடுத்த என்னுடைய உறவினர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
28-ஜன-202120:01:06 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இங்கே ஒரு கும்பலே இருக்கு இதை பாராட்ட இது உலக மீடியாக்கள் முன்பு பாக் ஆடும் நாடகம்
Rate this:
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
28-ஜன-202117:06:23 IST Report Abuse
magan Yes she's right this is the haven (india)for all morkens
Rate this:
Cancel
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜன-202116:22:56 IST Report Abuse
BalaG கேட்கவே வேதனையாக உள்ளது.. பாஸ்போர்ட் தொலைத்தற்கு 18 ஆண்டுகள் சிறையா? தொலைத்த பாஸ்போர்ட் வாங்குவதற்கு என்ன வழிமுறையோ அதை செய்து பாஸ்போர்ட் வாங்கி இருக்கலாம், அல்லது இந்திய தூதரகத்தின் வழியாக இந்தியா வர முயற்சி செய்திருக்கலாம்.. அதற்கு இரட்டை ஆயுள் தண்டனை? இதை ஏன் இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை? இதே நிலைமை ஒரு இந்திய V.I.P க்கு வந்தால் அரசாங்கம் இப்படிதான் பார்க்குமா? தொலைப்பதோ தவறவிடுவதோ அவ்வளவு பெரிய தவறா? ஒரு இந்திய குடிமகனை இப்படித்தான் பாதுகாக்குமா இந்திய அரசாங்கம்? இதை அவ்வளவு சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.. அந்த அம்மா தன் வாழ்நாளின் 18 வருஷத்தை தொலைத்திருக்கிறார், அதுவும் பாகிஸ்தான் சிறையில் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். இந்த அறிவு கெட்ட முட்டாள்தனத்திற்கு இந்தியா, பாகிஸ்தான் இரண்டு அரசாங்கமுமே அந்த பெண்மணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இதன் பிறகு அவர் வாழ்நாள் முழுவதும் V.V.I.Pக்கான சகல வசதியையும் கொடுத்து பார்த்து கொள்ளவேண்டும்.. அப்போகூட பத்தாது...
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்இங்கே உள்ள பொது மக்களில் முக்கால்வாசிப்பேர் தேசத்துரோகிகள் என்பது இன்றைய சித்தாந்தம்...
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
28-ஜன-202120:02:54 IST Report Abuse
vivek c maniசெய்தியை ஒழுங்காக படித்து விமர்சனம் செய்ய வேண்டும். பலரை இந்தியா அரசாங்கம் மீட்டுள்ளது. ஆனாலும் பாக்கிஸ்தான் பழி வாங்க துடிக்கும் அரசு. போரில் வெற்றி பெற முடியாமல் இவ்வாறு அப்பாவிகளை பழிவாங்குகிறது. இம்மாதிரி துன்பத்துக்குண்டான இந்துக்களும் பலர் பாக்கிஸ்தான் சிறையில் வாடுகின்றனர் . எனவே இதை அரசியல் மற்றும் மத கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்....
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
29-ஜன-202100:25:08 IST Report Abuse
naadodiTrue and agreed. Plus, no government can take any action unless they are approached. Please don't spit venom my friend BalaG....
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்NOT EVEN SEVEN THOUSAND YEARS OF JOY CAN JUSTIFY SEVEN DAYS OF SUPPRESSION. - PERSIAN POET - HAFEZ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X