போலீசாருக்கு அமித்ஷா ஆறுதல்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகள் பேரணியின் போது, போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று முன்தினம் (ஜன.,26) டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பகுதிக்குள்
போலீசார், காயம், அமித்ஷா, ஆறுதல், டில்லி போலீசார்,

புதுடில்லி: விவசாயிகள் பேரணியின் போது, போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று முன்தினம் (ஜன.,26) டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பகுதிக்குள் செல்லாமல் மற்ற பகுதிக்குள் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்தனர்.
அங்கு வேறு கொடியை ஏற்றினர். அவர்களை தடுப்பதற்காக போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களும், தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பை கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், திரத்ராம் மருத்துவமனை மற்றும் சுஷ்ருதா டிரவுமா மையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
28-ஜன-202119:28:53 IST Report Abuse
Raj தொட்டில் ஆட்டுவர், ஆறுதலும் சொல்லுவார்
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
28-ஜன-202119:26:39 IST Report Abuse
Raj போலீஸ் பொது சொத்தை தாக்குகிறதே அது என்னவாம் ? டெல்லி கலவரத்தில் ...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-202118:15:42 IST Report Abuse
J.V. Iyer ஐயோ பாவம் இவர்கள். இந்த கலவரகாரர்களை சும்மா விடக்கூடாது. இதற்கு சப்போர்ட் செய்த எதிர் கட்சிகளையும் புறக்கணிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X