பொது செய்தி

இந்தியா

டில்லி போலீசுக்கு 'சல்யூட்' - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி : குடியரசு தினத்தில் டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதில் போலீசார் 400 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைந்து குணமாக வேண்டியும், போராட்டத்தை அவர்கள் கையாண்ட விதத்தை பாராட்டியும் #Salute2DelhiPolice என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டில்லியில் தொடர்
Salute2DelhiPolice,

புதுடில்லி : குடியரசு தினத்தில் டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக மாறியது. இதில் போலீசார் 400 பேர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் விரைந்து குணமாக வேண்டியும், போராட்டத்தை அவர்கள் கையாண்ட விதத்தை பாராட்டியும் #Salute2DelhiPolice என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, 11 சுற்று பேச்சு நடத்தியும் பலனில்லை. இரண்டு மாதங்களுக்கு மேலாக அமைதியாக போராட்டம் நடந்து வந்த நிலையில் ஜன., 26 குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள், செங்கோட்டையில் ஏறி, சீக்கிய மதக் கொடியையும், விவசாய சங்கக் கொடியையும் ஏற்றினர். டில்லியே கலவரக்காடாக மாறியது. இதையடுத்து அங்கு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக போலீசார், 22 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்முறையில் 400 போலீசார் காயமடைந்துள்ளனர்.


latest tamil news
டில்லியில் தற்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனினும், பல பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே வன்முறையில் காயமடைந்த 400 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வன்முறையாளர்கள் போராட்டக்களத்தில் போலீசாரிடம் நடந்து கொண்ட விதம், அவர்களை தாக்கிய வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. போராட்டகளத்தில் போலீசார் பணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், காயமடைந்த போலீசார் விரைந்து குணமாக வேண்டியும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


latest tamil news
''குடியரசு தினத்தில் எங்களது தேசிய சின்னங்களை இழிவுப்படுத்தியது தேசத்துரோகம். அன்றைய தினம் போராட்டக்களத்தில் மிகுந்த கட்டுப்பாட்டை காட்டியதற்காக டெல்லி போலீசாருக்கு வணக்கம் செலுத்துகிறேன்''. ''வன்முறையாளர்கள் வாளை காட்டி மிரட்டினார்கள், தாக்கினார்கள். போலீசாரிடம் துப்பாக்கி இருந்தபோதும் அவர்கள் அதை உபயோகிக்கவில்லை''. ''அனுமதிக்கப்பட்ட பாதையில் போராட்டக்காரர்கள் செல்லாமல், வன்முறையில் ஈடுபட்டதாலேயே இவ்வளவு பெரிய கலவரம் வந்தது.
போலீசார் சரியாகத்தான் தங்களது பணியை செய்தனர்''. ''அந்த வன்முறையாளர்களுக்காக நாங்கள் உங்களிடம்(டில்லி போலீஸ்) மன்னிப்பு கேட்கிறோம். உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்''. டில்லி போலீசாரின் அனைத்து முயற்சிக்கும் பாராட்டுக்கள். போராட்ட களத்தில் உங்கள் பொறுமைக்கு, பணிக்கும் வணக்கம்'' என பலரும் டில்லி போலீசாரை பாராட்டி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #Salute2DelhiPolice என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
29-ஜன-202115:34:20 IST Report Abuse
T.B.Sathiyanarayananan Let us Salute our Police offcials.
Rate this:
Cancel
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
29-ஜன-202107:30:58 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga எது எப்படியோ, இந்த போராட்டக்காரர்கள் அமைதி வழியை விட்டுவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டது மிகவும் குற்றமான செயல். அதுவும் டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை இறக்கிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றியது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இதை எல்லா அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்த்து உள்ளன. வரவேற்கத்தக்க ஒன்று
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
29-ஜன-202107:17:06 IST Report Abuse
Mannai Radha Krishnan டெல்லி சட்ட சபையை கலைத்து, கவர்னர் ஆட்சி வரனும். அப்பத்தான் அயோக்யகளை பிடித்து கனுக்-கனுவா அடிச்சு துடிக்க வைக்கனும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X