புதுடில்லி: கொரோனா காலகட்டத்தில், இந்த படையை சேர்ந்த லட்சகணக்கானோர் அரசுடனும் சமுதாயத்துடனும் இணைந்து பணியாற்றியது பாராட்டத்தக்கது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியின் கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படையின் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: புயல், வெள்ளம் அல்லது மற்ற பேரிடர்களின் போதும் தேசிய மாணவர் படையினர், நாடு முழுவதும் மக்களுக்கு உதவியுள்ளனர். கொரோனா காலகட்டத்தில், இந்த படையை சேர்ந்த லட்சகணக்கானோர் அரசுடனும் சமுதாயத்துடனும் இணைந்து பணியாற்றியது பாராட்டத்தக்கது. தேசிய மாணவர் படையின் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. எல்லை மற்றும் கடலோர பகுதிகளிலும் தேசிய மாணவர் படையின் பங்களிப்புடன் பாதுகாப்பை வலுப்படுத்த ஊக்கமளிக்கப்படும்.

கடலோர மற்றும் எல்லை பகுதிகளில் அமைந்துள்ள 175 மாவட்டங்களில், தேசிய மாணவர் படையினருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக , ஒரு லட்சம் தேசிய மாணவர் படையினருக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 3ல் ஒரு பங்கு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE