பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை பிப்.,2ல் வெளியீடு: மத்திய கல்வி அமைச்சர்

Updated : ஜன 28, 2021 | Added : ஜன 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி
CBSE, ExamTimetable, RameshPokhriyal, சிபிஎஸ்இ, தேர்வு, அட்டவணை, மத்திய கல்வி அமைச்சர், ரமேஷ் பொக்ரியால்

புதுடில்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வருகிற பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, தற்போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுகள் மார்ச் மாதம் துவங்குவதாகவும், ஜூலை 15-ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் அறிவித்தார்.


latest tamil news


இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான விரிவான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் கூறினார். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற காரணத்தால், சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
28-ஜன-202116:10:52 IST Report Abuse
Rengaraj மிகவும் முக்கியமான அறிவிப்பு. மாணவமணிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. கல்வியும் பொருளாதார சக்கரத்தின் சுழற்சியின் ஒரு அங்கமாகும். குற்ப்பிற்காக பள்ளி , கல்லூரி மற்றும் கல்வித்துறை சார்ந்து நாட்டில் அநேகம்பேரின் வாழ்வாதாரம் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த வாழ்வாதாரம் வரும் கல்வியாண்டிலாவது சீராகவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X