தினகரனின், அ.ம.மு.க.,வை, அ.தி.மு.க.,வோடு இணைக்கணும்னு, பா.ஜ., மேலிடம் விரும்பியதாம்... முதல்வர் டில்லிக்கு போன போது, பா.ஜ., மேலிடம் இந்த தகவலை சொல்ல, ‛அ.ம.மு.க.,வுக்கு, ஐந்து சந்தவீத ஓட்டு இருந்தாலும், அவங்களை கூட்டணியில சேர்க்கறதுனால, பதினைந்து சதவிகித பொதுமக்களின் ஓட்டு, அ.தி.மு.க., கூட்டணிக்கு கிடைக்காம போய்டும்'னு, முதல்வர் சொன்னாராம்... ‛அப்படின்னா அந்த திட்டத்தை கைவிட்டுடலாம்'னு, முதல்வர்கிட்ட, பா.ஜ., தரப்பு உறுதியா சொல்லிடுச்சாம்...!
புது முகங்களை தேடும் தி.மு.க.,!

சட்டசபைத் தேர்தல்ல, தி.மு.க.,வுல புதுமுகங்கள் பலரை களம் இறக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்... இதுக்காக, தொகுதியில சொந்த செல்வாக்கும், பண பலமும் இருக்கும் ஆட்களை, தேடி தேடி கட்சியில சேர்க்குறாங்க... நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில சேதுபதிங்கற ஜமீன் ஒருத்தரை திடுமென கட்சியில சேர்த்திருக்காங்க... அவருக்கே அங்கே போட்டியிட சீட் கொடுக்கப் போறாங்களாம்...இதை நம்பி, அவரும் பொங்கல் விழா நடத்தி, ஒண்ணரை கோடி ரூபாய் வரை செலவு செஞ்சிருக்காராம்... நெல்லை புறநகர் மாவட்ட செயலரான முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு, இது கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்காம்...!.
மாநாட்டு பணிகளை புறக்கணிக்கும் மகேஷ்!
திருச்சி சிறுகனூரில் பிரம்மாண்டமா மாநாடு நடத்த, தி.மு.க., திட்டமிட்டிருக்கு... இதுக்காக, 300 ஏக்கர்ல இடத்தை தயார் செய்ற வேலையில கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு இறங்கியிருக்காரு... அந்த பணிகள்ல, திருச்சி மாவட்ட செயலர்கள்ல ஒருத்தரான மகேஷ் பொய்யாமொழி கலந்துகிடலை... நேருவின் மகன் அருண் நேருவும், மகேஷ் பொய்யாமொழியும் கட்சிக்காரர் வீட்டு திருமணத்துக்குப் போன போது, அருண் நேருவுக்கு கூடுதல் மரியாதை தந்தாங்களாம்... அதனால, தி.மு.க., மாநாட்டு ஏற்பாடுகளை மகேஷ் புறக்கணிச்சிட்டு இருக்காராம்...!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE