சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 28, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்உருகும் பனிக்கட்டிபூமியில் 1994 - 2017 வரை 28 லட்சம் கோடி டன் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. இது 300 அடி தடிமன் உடைய பனிக்கட்டிகளால் பிரிட்டன் முழுவதையும் மூடுவதற்கு சமம் என செயற்கைக்கோள் தகவல்களை ஆய்வு செய்து லீட்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பனிக்கட்டிகள் உருகும் சதவீதம் 1994ல் இருந்ததை விட, 65 சதவீதம் அதிகரித்துள்ளது. 1994ல் 80 ஆயிரம் டன் என இருந்தது. 2017ல் 1.3

அறிவியல் ஆயிரம்
உருகும் பனிக்கட்டி
பூமியில் 1994 - 2017 வரை 28 லட்சம் கோடி டன் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. இது 300 அடி தடிமன் உடைய பனிக்கட்டிகளால் பிரிட்டன் முழுவதையும் மூடுவதற்கு சமம் என செயற்கைக்கோள் தகவல்களை ஆய்வு செய்து லீட்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பனிக்கட்டிகள் உருகும் சதவீதம் 1994ல் இருந்ததை விட, 65 சதவீதம் அதிகரித்துள்ளது. 1994ல் 80 ஆயிரம் டன் என இருந்தது. 2017ல் 1.3 லட்சம் டன்னாக உயர்ந்தது. அண்டார்டிகா, கிரீன்லாந்தில் அதிகளவில் பனிக்கட்டி உருகியுள்ளன. இது உலகில் கடல் நீர்மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது.

தகவல் சுரங்கம்
முதல் நீர்மூழ்கி கப்பல்

அணு சக்தி மூலம் இயங்கும் உலகின் முதல் நீர்மூழ்கி கப்பலின் பெயர் யு.எஸ்.எஸ் நாட்டிலஸ். இதன் கட்டுமானப்பணி 1952ல் தொடங்கி 1954ல் முடிக்கப்பட்டது. சோதனைக்கு பின் 1955ல் அமெரிக்க கப்பல்படையில் சேர்க்கப்பட்டது. 1958 ஆக., 3ல் வட துருவத்தில் இக்கப்பல் தன் முதல் பயணத்தை நிறைவு செய்தது. இதன் நீளம் 320 அடி. அகலம் 28 அடி. மணிக்கு 43 கி.மீ., வேகத்தில் செல்லும். மற்ற வகை கப்பல்களை விட நீண்ட நேரம் மூழ்கியிருக்கும் திறன் பெற்றது. 1980ல் கப்பல்படையில் இருந்து ஓய்வு பெற்றது. பின் இது கப்பல் மியூசியத்தில் வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X