டில்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான செய்தி ஒளிபரப்பியதாக இந்தியா டுடே டி.வி. சானல் செய்தி ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்து தண்டனை வழங்கியது டி.வி. சேனல் நிர்வாகம்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது நவ்னீத்சிங் என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழந்ததில் பலியாயானர். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு டி.வி. சானல்களில் ஒளிரப்பாயின.
![]()
|
இந்த உண்மையை மறைத்து இந்தியா டுடே டி.வி. சேனலின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், , நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தியை ஒளிபரப்பினார். இதற்கு மறுப்பு தெரிவித்த டில்லி போலீசார் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தனர். உடனே தவறாக செய்தி ஒளிபரப்பியதை சர்தேசாய் ஒப்புக்கொண்டார்
இதையடுத்து இந்தியா டுடே செய்தி சேனல் நிர்வாகம் சர்தேசாயின் ஒரு மாத சம்பளத்தினை பிடித்தம் செய்ததுடன் இரண்டு வாரங்கள் அவரது செய்தி ஒளிபரப்பிற்கு தடை விதித்ததாக தி குயின்ட் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE