திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கேத்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த வக்கீல் சிவராம். இவர் இடப்பிரச்னைக்காக செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு 9.5.2010 ல்சென்றார். அங்கு இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வம், எஸ்.ஐ., ரமேஷ்கண்ணா, ஏட்டுக்கள் ராமராஜ், ஜெயக்குமார் ஆகியோருக்கும், வக்கீலுக்கும் தகராறு ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. இதுகுறித்து வக்கீல் சிவராம், சி.ஜே.எம்., கோர்ட்டில் தனிநபர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சம்மன் கொடுத்தும் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஏட்டுக்கள் ஆஜராகவில்லை. நான்கு பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி வெங்கடாச்சலாம் உத்தரவிட்டுள்ளார்.