பொது செய்தி

இந்தியா

விவசாயி உடலில் துப்பாக்கியால் சுட்ட காயம் இல்லை : சர்தேசாய் கூறியது பொய் என நிரூபணம்

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒரு விவசாயி உயிரிழந்ததற்கு காரணம், போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக செய்தி கூறிய இந்தியா டுடே கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய் கூறியது பொய் என பிரேத பரிசோதனையில் நிரூபணமானது.மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நவ்னீத்சிங், 24, என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர்
TractorRally, Death, HeadInjuries, NoBullet,

புதுடில்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒரு விவசாயி உயிரிழந்ததற்கு காரணம், போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக செய்தி கூறிய இந்தியா டுடே கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய் கூறியது பொய் என பிரேத பரிசோதனையில் நிரூபணமானது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நவ்னீத்சிங், 24, என்ற விவசாயி வேகமாக ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழ்ந்ததில் பலியானார். இதன் வீடியோ காட்சிகள் பல்வேறு டி.வி. சேனல்களில் ஒளிபரப்பாயின. இந்த உண்மையை மறைத்து இந்தியா டுடே டி.வி. சேனலின் கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், நவனீத் சிங்கை போலீசார் சுட்டு கொன்றதாக தவறான செய்தியை ஒளிபரப்பினார். இதற்கு மறுப்பு தெரிவித்த டில்லி போலீசார் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தனர். உடனே தவறாக செய்தி ஒளிபரப்பியதை சர்தேசாய் ஒப்புக்கொண்டார்.


latest tamil newsஇதையடுத்து இந்தியா டுடே செய்தி சேனல் நிர்வாகம் சர்தேசாயின் ஒரு மாத சம்பளத்தினை பிடித்தம் செய்ததுடன் இரண்டு வாரங்கள் அவரது செய்தி ஒளிபரப்பிற்கு தடை விதித்ததாக தி குயின்ட் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நவ்னீத்சிங்கின் பிரேத பரிசோதனை முடிவுகளில் அவரது தலையில் எந்தவித புல்லட் காயங்களும் இல்லை என நிரூபணமாகியுள்ளது என அவரது சொந்த மாவட்டமான ராம்பூரின் போலீஸ் உயரதிகாரி உ.பி.,யில் தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடல், ராம்பூரில் உள்ள அவரது சொந்த கிராமமான டிப்டிபாவில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ராம்பூர் மாவட்ட கலெக்டர் ஆஞ்சநேய குமார் சிங் கூறுகையில்; ,
‛பிரேத பரிசோதனையின் போது நவ்னீத்சிங்கின் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். அவரது தலையில் புல்லட் காயம் இருந்திருந்தால், பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்திருக்கும். பிரேத பரிசோதனையை வீடியா பதிவும் செய்யப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவ அலுவலரால் கண்காணிக்கப்பட்டது,' எனக்கூறினார்.
எஸ்.பி., ஷோகன் கவுதம் கூறுகையில், ‛பிரேத பரிசோதனை அறிக்கையில் புல்லட் காயங்கள் இல்லை. எக்ஸ்ரே.,யும் எடுக்கப்பட்டது அதிலும், புல்லட் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தவிர முகம், கால்களில் 6 காயங்கள் இருந்தன,' என்றார்.


latest tamil newsபிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் மரணத்திற்கு காரணம். நவ்னீத் சிங்கின் உடலில் ஆறு காயங்கள் ஏற்பட்டன. புருவத்திற்கு அருகில், அவரது வாயின் அருகே, வலது காதுக்கு மேல், மற்றும் வலது தொடையில் சிதைவுகள் ஏற்பட்டிருந்தன. அவர் இடது காதில் மண்டை ஓட்டின் மேல் வீக்கம் இருந்தது. மார்பின் வலது பக்கத்தில் பலமான காயம் இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் சுட்டுக்கொன்றதாக சர்தேசாய் கூறியது பொய்யென நிரூபணமானது.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-202104:52:20 IST Report Abuse
J.V. Iyer நம்ம தத்தி ராகுல்ஜியை அனுப்பினால் தோசைசுட்ட காயத்தை பெரிசுபடுத்தி வேடிக்கை பண்ணுவார்.
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
29-ஜன-202121:56:38 IST Report Abuse
Mannai Radha Krishnan தேசிய கொடியை தீவிர வாத பிரேதத்தின் மீது ஏன் போர்த்த வேண்டும். இது கொடியை அவமானப் படுத்துவது ஆகும்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
29-ஜன-202121:38:48 IST Report Abuse
sankaranarayanan இது போன்று தமிழகத்தில், இழிவாக - தரக்குறைவாக பேசுவது - கலவரத்தை தூண்டிவிடும் பத்திரிக்கைகளை அடியோடு தடை விதிக்க வேண்டும். மற்றும் அதன் ஆசிரியர்களை உள்ளே தள்ளி ஒற்றுமையை குலைப்பதாக - பகைமையை தூண்டுவதாக கூறி வெளி வரமுடியாதபடி உள்ளே தள்ள வேண்டும். நாட்டை கெடுக்கும் - ஒற்றுமையைக் கெடுக்கும் நய வஞ்சர்களை இனியும் வெளியே விடக்கூடாது. எழுந்திரு பாரதமே பொங்கி எழு இனியும் தேச துரோகிகளை நடமாட விடாதே ஜெய் பாரதம் ஜெய் தமிழகம் ஜெய் மனிதகுலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X