சென்னை: கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 31ம் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

முதலில் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஆலோசனையின் போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது: நடமாடும் வாகனங்கள் உதவியுடன் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.7.5 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதித்தவர்களை உடனே கண்டறிவதால், பரவல் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி 58 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்களில் 78 சதவீதம் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE