பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் வெளியேறுமாறு போராட்டம்: சிங்கு பகுதி மக்கள் மீது தடியடி

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் கலைந்து செல்லுமாறு கல் மற்றும் கம்புகளை வீசினர். இதனை தொடர்ந்து இருதரப்பினர் மோதல் நடக்காமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போலீசாருடனும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசா்

புதுடில்லி: டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் கலைந்து செல்லுமாறு கல் மற்றும் கம்புகளை வீசினர். இதனை தொடர்ந்து இருதரப்பினர் மோதல் நடக்காமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போலீசாருடனும் மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசா் காயமுற்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது.



latest tamil news



மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியின் சிங்கு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிங்கு பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு தேசியக் கொடியுடன் ஊர்வலமாக வந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக உள்ளூர் மக்கள் நடமாட இடையூறு ஏற்படுவதுடன் அப்பகுதி கடைகளில் விற்பனை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


latest tamil news



சிங்கு பகுதியை விட்டு விவசாயிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டபடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசாரின் தடுப்பையும் மீறி, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளை நோக்கி கம்பு, கற்களை வீசி விவசாயிகளை விரட்டியடிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சிங்கு பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து சிங்கு பகுதி மக்களை கலைந்து செல்லுமாறு தடியடி நடத்தி விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஏராளமானோர் போராட்டத்தை தொடரும் நிலையில், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஒரு சிலர் கத்தியால் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANIAN K - Dubai ,இந்தியா
30-ஜன-202106:48:49 IST Report Abuse
MANIAN K அடம் பிடிக்கும் கமிஷன் ஏஜெண்டுகள் தவிர எல்லா உண்மையான விவசாயிகளும் கம்மி, துடைப்பம், கான்கிரேஸுக்கு அடுத்த தேர்தலில் மரண அடி கொடுப்பார்கள்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
29-ஜன-202121:35:43 IST Report Abuse
a natanasabapathy உங்களால் தான் போராட்ட காரர்களை விரட்ட முடியவில்லை விரட்டும் அப்பாவி மக்களின் மீது ஏன் தடியடி நடத்துகிறீர்கள் உங்கள் வீரத்தை போராடும் தேச துரோகிகளை மீது காட்ட வேண்டியது தானே
Rate this:
Cancel
29-ஜன-202120:44:41 IST Report Abuse
Ganesan Madurai ஆனா திருட்டு திராவிட கம்மிகள் இவர்களை பாஜாகான்னு பச்சை பொய் புளுகுவானுங்க பாரு
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஜன-202123:11:14 IST Report Abuse
தமிழவேல் நீங்களே நூல் எடுத்துக் கொடுக்கத்தேவை இல்லை.....
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
30-ஜன-202104:51:29 IST Report Abuse
மதுரை விருமாண்டி"குதிருக்குள்ளே இருக்குறது இவன் அப்பன் இல்லேன்னுட்டன்" .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X