12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (29.1.2021 - 4.2.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்சந்திரன், குரு, புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.அசுவினி: திடீர் ஆதாயங்கள் உண்டு. எதிர்பாராத பணவரவு கிடைப்பதால் மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்வீர்கள். குடும்பத்திலும், அலுவலகத்திலும்
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (29.1.2021 - 4.2.2021) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்சந்திரன், குரு, புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.


அசுவினி: திடீர் ஆதாயங்கள் உண்டு. எதிர்பாராத பணவரவு கிடைப்பதால் மகிழ்ச்சியின் எல்லைக்கே செல்வீர்கள். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.பரணி: வேலை விஷயத்தில் எடுத்த முயற்சி ஜெயிக்கும். உங்களுடைய கனவுகள் நிறைவேற இது சரியான சமயம். கடன் பிரச்சனை தீர்ந்து செல்வ செழிப்பு அடையப் போகிறீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.கார்த்திகை 1: இவ்வாரம் உங்களுக்கு நிறைய யோகங்களை அள்ளித் தரப்போகிறது. வேலை மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். முன்னேற்றப் பாதையில் அடிஎடுத்து வைப்பீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.


ரிஷபம்புதன், குரு, சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.


latest tamil news

கார்த்திகை 2,3,4: அதிர்ஷ்டமும், பெரியோரின் ஆசிகளும் கிடைக்கும் வாரம். இது வரை இருந்த பணக்கஷ்டம் நீங்கும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். தடைகள் தவிடு பொடியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டு.ரோகிணி: சொந்த வீடு, வாகனம் வாங்குவதற்கான செயல்களை செய்வீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். திட்டமிட்டு பணிகளை முடிப்பீர்கள்.மிருகசீரிடம் 1,2: பொருளாதார பிரச்னைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பதவி, ஊதிய உயர்வு, பணியிடமாற்றம் போன்றவை கிட்டும். பயணங்களால் நன்மை ஏற்படும். சுபநிகழ்ச்சி நடைபெறும்.


மிதுனம்ராகு, கேது, புதன் நன்மைகளை வாரி வழங்குவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.


மிருகசீரிடம் 3,4: உங்களுடைய தோஷங்கள் நீங்கும். எதிர்பாராத லாபங்களால் பொருளாதாரத்தில் உயர்வீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.திருவாதிரை: சுபவிஷயங்கள் நிகழ்த்துவதற்கான செலவுகள் வரும். மனக்குழப்பங்கள் தீரும். எடுத்த செயல்களை இனிதே செய்து முடிப்பீர்கள். பெண்கள் அழகுசாதன பொருட்களை வாங்கி மகிழ்வர்.புனர்பூசம் 1,2,3: உடல்நலம் பயமுறுத்தினாலும் நீங்கள் பயப்பட தேவையில்லை. திடீர் அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்க வேண்டாம். உழைப்பு மட்டுமே பலன் தரும். எல்லாமே சற்று நிதானப் போக்கில்தான் நிகழும்.


கடகம்குரு, புதன், சந்திரன் அனுகூல நற்பலனை தருவர். ராகவேந்திரர் வழிபாடு நலம் தரும்.


புனர்பூசம் 4: சகலமும் யோகமாக அமையப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வேலை, தொழிலில் சிறப்படைவீர்கள். பணப் புழக்கம் நன்றாகவே இருக்கும். துணிச்சலான செயல்களை செய்வதற்கு மனம் விரும்பும்.பூசம்: வருமானம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். திருமண யோகம் வரும். செலவைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.ஆயில்யம்: சிலருக்கு திருமண வாய்ப்பு கூடிவரும். கூடுதலாக உழைத்தால் மட்டுமே நிறைய லாபம் வரும். கட்டாயம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.


சிம்மம்செவ்வாய், சுக்கிரன், சந்திரன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.


மகம்: சுபநிகழ்ச்சிகளால் செலவுகள் வரலாம். உங்களுடைய கவர்ச்சி அம்சம் மேலோங்கும். நீங்கள் சொல்வதைக் கேட்க பலர் தயாராக இருப்பார்கள். எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரால் நன்மை ஒன்று ஏற்படும்.


பூரம்: அழகுசாதன பொருட்களை வாங்குவதில் ஈடுபாடு கொள்வீர்கள். திருமணமானவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு. நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.உத்திரம் 1: மகிழ்ச்சியாக ஊர்சுற்ற தோன்றும். எனினும் கடமை உணர்ச்சியை கைவிட வேண்டாம். உடல்நலத்தை கெடுக்கும் விஷயங்களை தவிர்க்கவும். மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வர்.


கன்னிகுரு, சந்திரன், புதன் நலம் தரும் அமைப்பில் உள்ளனர். குருவாயூரப்பன் வழிபாடு வளம் தரும்.


உத்திரம் 2,3,4: தோஷங்களால் சிரமப்பட்டு வந்த உங்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது. பணத்தின் அருமையை உணர்ந்து கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். வருமானம் ஓரளவு திருப்தி தரும்.அஸ்தம்: தடைபட்டு வந்த செயல்கள் எளிதாக நடக்கப் போகின்றன. வேலை தேடுவோருக்கு நற்செய்தி உண்டு. பதவி உயர்வு வரும். தொழிலில் லாபம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த உறுத்தல் நீங்கும்.சித்திரை 1,2: புதிய வருமானம் வரும். திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடக்கும். பணத்தை பிறருக்கு கவனமாக எண்ணிக் கொடுங்கள். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.


துலாம்சுக்கிரன், புதன், சந்திரன் அதீத நற்பலன்களை தருவர். குலதெய்வ வழிபாடு வெற்றி அளிக்கும்.


சித்திரை 3,4: அனைத்து வகையான போக்குவரத்து சாதனங்களில் பயணம் செய்வீர்கள். உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். இப்போதைக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும்.சுவாதி: மனதில் நிம்மதி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான விஷயங்கள் நடக்கும். பணியாளர்கள் சற்று அதிக பரபரப்புடன் வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.விசாகம் 1,2,3: உங்களின் கவரும் தன்மை அதிகரிக்கும். புதியதோர் காதல் ஏற்படக்கூடும். வாழ்வில் முன்னேறுவதற்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். எதிர்காலத்திட்டங்கள் தீட்டுவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.


விருச்சிகம்புதன், செவ்வாய், சுக்கிரன் நற்பலனைத் தருவர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.


விசாகம் 4: வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு சற்று தாமதமாகவே பதில் வரும். வீடு இடமாற்றம் ஏற்பட்டு முகவரி மாறும். விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வர்.அனுஷம்: உங்களின் கற்பனை பயத்தால் வாட்டம் ஏற்படும். யாரிடமிருந்தும் இப்போதைக்கு நன்றியை எதிர்பார்க்க வேண்டாம். எதுவும் ஏற்ற, இறக்கமின்றி சீராகவே நடைபெறும். நல்லவர்களின் ஆசி கிடைக்கும்.கேட்டை: குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி உண்டு. கல்வி, எழுத்து, புத்தகம் சார்ந்த துறைகளில் லாபம் மெல்ல கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.


தனுசு
ராகு, கேது, சுக்கிரன் தாராள நற்பலன்களை வழங்குவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


மூலம்: சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் நன்மை ஏற்பட்டு மகிழ்வர். பொருளாதார நிலை மேம்படும். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் திறனை பெறுவீர்கள். எதிரிகள் மனம் மாறுவார்கள்.பூராடம்: அனுகூலமான வாரம். உங்களின் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.உத்திராடம் 1: செயலிலும், பேச்சிலும் பொறுமை தேவை. இந்த வாரம் உங்களுக்கு சுமுகமான வாரமாக அமையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள்.சந்திராஷ்டமம்: 29.1.2021 காலை 6:00 - 30.1.2021 அதிகாலை 4:45 மணி

மகரம்


கேது, புதன், சந்திரனால் நன்மை கிடைக்கும். பைரவர் வழிபாடு நன்மை தரும்.

உத்திராடம் 2,3,4: பிறரது விஷயங்களில் தலையிடாதீர்கள். பிரச்னைகள் ஏற்படலாம். உடல் நலம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தாய் வழி உறவினரால் தேவையான நேரத்தில் ஆதரவு கிடைக்கும்.


திருவோணம்: சகோதரர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வர். நல்லவர்களின் நட்பால் நன்மைகள் வந்து சேரும். நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.அவிட்டம் 1,2: பேச்சில் நிதானம் தேவை. பரபரப்புடன் இயங்கி நல்ல செயல் ஒன்றை முடிப்பீர்கள். திருத்தலங்களுக்கு செல்ல எடுத்த முயற்சியில் தடை ஏற்பட்டு பிறகு நிறைவேறும். சேமிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: 30.1.2021 அதிகாலை 4:46 - 1.2.2021 காலை 9:05 மணி


கும்பம்செவ்வாய், சுக்கிரன், சந்திரனால் அமோக நன்மைகள் கிடைக்கும். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.


அவிட்டம் 3,4: பிறருடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.சதயம்: எதிர்பாலின நட்புகளால் நன்மைகள் கூடும். பணியாளர்களுக்கு அலைச்சல் சற்று கூடவே செய்யும். உங்களை பெற்றோர் புரிந்து கொள்ளவில்லை என்று வருத்தப்படாதீர்கள். மனசாட்சிக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.பூரட்டாதி 1,2,3: உழைப்பு, முயற்சியால் பணவரவு கூடும். தொழில் மேன்மை அடையும். வேலை இல்லாதோருக்கு வேலை வாய்ப்பு கூடிவரும். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.சந்திராஷ்டமம்: 1.2.2021 காலை 9:06 - 3.2.2021 காலை 11:59 மணிமீனம்புதன், குரு, ராகு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

பூரட்டாதி 4: நீங்கள் பெரிய அளவில் உயரப் போகிறீர்கள். வேலை, தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். சொத்து பிரச்னைகள் தீரும். சில விஷயங்கள் இழுபறியுடன் நடந்து முடியும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.


உத்திரட்டாதி: தடைகள் நீங்கும். வீடு வாங்கும் முயற்சி கை கூடி வரும். பண விஷயத்தில் ஏமாற வாய்ப்பிருக்கிறது கவனம் தேவை. உடல் நிலையில் அக்கறை கொள்ளுங்கள். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள்.ரேவதி: வாழ்க்கை துணைவரால் நலம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளுக்கு பாராட்டும், புகழும் கிடைக்கும். விவாதங்களை தவிர்த்தால் மன உளைச்சலை தடுக்கலாம்.சந்திராஷ்டமம்: 3.2.2021 மதியம் 12:00 மணி - 4.2.2021 நாள் முழுவதும்

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-202120:49:29 IST Report Abuse
oce இங்கு கூறப்படும் பலன்கள் நடுத்தர வர்க்கத்தை மையமாக வைத்து சொல்லப்படுபவை. இதில் பணக்காரர்கள் ஏழைகள் பற்றி கூறவில்லை. இது பொதுவாக ஒயிட் காலர் ஜாப் செய்பவர்களுக்கு சொல்லப்படும் வாரபலன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X