பொது செய்தி

இந்தியா

11 சதவீத பொருளாதார வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கை

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: 2021- 22 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 11 சதவீத வளர்ச்சி என்பது 1991ம் ஆண்டில், இந்தியாவில் தாராளமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு , நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியாக இருக்கும்.பார்லிமென்டின் பட்ஜெட்
பொருளாதார வளர்ச்சி, பொருளாதார ஆய்வறிக்கை, நிதியமைச்சர், நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், நிர்மலா,

புதுடில்லி: 2021- 22 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த 11 சதவீத வளர்ச்சி என்பது 1991ம் ஆண்டில், இந்தியாவில் தாராளமயம் அமல்படுத்தப்பட்ட பிறகு , நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியாக இருக்கும்.

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி உரையுடன் இன்று துவங்கியது. வரும் பிப்.1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021ம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி - 7.7 சதவீதம் ஆக இருக்கும். அடுத்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம், வி வடிவத்தில் வளரும். 2021-22 நிதியாண்டில் 11 சதவீத வளர்ச்சி பெறும்.


latest tamil news


மார்ச் மாதம் முடியும் இந்த நிதியாண்டிற்கான நிதிபற்றாக்குறை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட, ஜிடிபி.,யில் 3.5 சதவீதமாக இருக்கும். மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் மூலம் பொருளாதாரம், இயல்பான நிலையை நெருங்கி வருவதால்,சேவை துறை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றில் வலுவான மீட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை புத்துயிர் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள் நாடு முழுவதும் துவங்கியுள்ளதால், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் 2021 - 22ம் நிதியாண்டில் வளர்ச்சி பெறும் என பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
30-ஜன-202106:40:58 IST Report Abuse
Muguntharajan இப்படியே சொல்லிகிட்டு ஊர ஏமாத்துங்க. ஒரு மண்ணாங்கட்டி வளர்ச்சியும் இல்ல. பெட்ரோல் கேஸ் விலை ஏத்துனது தான் வளர்ச்சியா?
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
29-ஜன-202123:57:37 IST Report Abuse
அன்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் அசுர வேகமெடுக்கிறது. இரவு ஒன்பது மணிக்கு பிரதமர் டிவி இல் தோன்றி, காற்று மாசுக்கட்டுப்பாடு காரணமாக டீசல் என்ஜின்களை நாளை முதல் தடை செய்கிறேன் என்று சொல்லாத வரை, இந்தியா வேகமாக வளரும்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
29-ஜன-202123:47:30 IST Report Abuse
periasamy ரோமன் வளர்ச்சிதான் ஏற்படும் மண்ணாங்கட்டி ஏழை எளிய மக்களையம் சிறு குறு தொழில் முனைவோரையும் கொரோன காலத்தில் கண்டுகொள்ளாத இந்த கார்பொரேட்களின் நட்பு அரசு உள்ளவரை ரோமன் வளர்ச்சிதான் ஏற்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X