வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதே தீர்வு: ராகுல்

Updated : ஜன 29, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
புதுடில்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே, பிரச்னைக்கு தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழித்துவிட்டது. போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்கு சென்றது எப்படி? அவர்களை ஏன் போலீசார் தடுக்கவில்லை? இது தொடர்பாக உள்துறை அமைச்சர்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதே, பிரச்னைக்கு தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு அழித்துவிட்டது. போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்கு சென்றது எப்படி? அவர்களை ஏன் போலீசார் தடுக்கவில்லை? இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் குறித்து ஆழமாக புரியவில்லை.பல மாதங்களாக விவசாயிகளாக போராட்டம் நடத்துகின்றனர். இதனால், சில பிரச்னைகள் வர செய்யும். விவசாய அமைப்பை மத்திய அரசு உடைக்கிறது. இந்த சட்டங்கள் மூலம் பெரிய நிறுவனங்கள் வேளாண் பொருட்களை மொத்தமாக பதுக்கி வைக்கப்படும்.


latest tamil news


அமைதியான முறையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய மத்திய அரசு, அவர்களை தாக்குகிறது. விவசாயிகள் எதுவும் கூற மாட்டார்கள் என மோடி நினைக்கிறார். கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதை ஒரே தீர்வு. விவசாயிகள் வீட்டிற்கு செல்வார்கள் என மத்திய அரசு நினைக்க வேண்டாம். தற்போதுள்ள பிரச்னை பெரிதாகுமோ என கவலைப்படுகிறேன். அது நமக்கு தேவையில்லை. தீர்வு தான் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்டில் மகாத்மா சிலை முன்பு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
30-ஜன-202106:46:46 IST Report Abuse
C.SRIRAM நீ எதிர் கட்சியா அல்லது எதிரி கட்சியா ?. எப்பவுமே தேச விரோதமாகவே செயல் படுகிறாயே ?
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
30-ஜன-202106:34:06 IST Report Abuse
MANIAN K சீனாவிடமிருந்து கிடைத்த காசுக்கு மேலே ரொம்ப கூவும் விசுவாசி
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
30-ஜன-202106:20:07 IST Report Abuse
Sivaraman நீங்கள் அரசியலில் இருந்து விலகினால் பிஜேபி வீழ்ச்சி நிச்சயம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X