அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் இடைவெளி
பிரிட்டன் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான துாரம் ஆண்டுதோறும் 4 செ.மீ., அதிகரிக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டன் விஞ்ஞானிகள் அட்லாண்டிக் கடலில் \600 கி.மீ., ஆழம் வரை, நில அதிர்வு செயல்பாடு குறித்து 'செசிமோமீட்டர்' கருவி மூலம் ஆய்வு நடத்தினர். இதில் அமெரிக்கா - ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே ஆண்டுதோறும் 4 செ.மீ. இடைவெளி அதிகரிக்கிறது என கண்டுபிடித்தனர். டெக்டானிக் தகடுகள் என்பது பூமியின் மேற்பரப்பு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இத்தகடுகள் நகர்ந்த தன் விளைவாக தான் பல கண்டங்களாக பிரிந்தன.
தகவல் சுரங்கம்
தியாகிகள் தினம்
உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மகாத்மா காந்தியின் நினைவு தினம் (ஜன.30) தியாகிகள் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய காந்தி, 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில் இன்று நாடு முழுவதும் காலை 11:00 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE