டில்லி கலவரத்தில் சமூக விரோதிகள்: முருகன் குற்றச்சாட்டு

Updated : ஜன 31, 2021 | Added : ஜன 29, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
மதுரை :''டில்லியில் விவசாயிகள் போர்வையில், சமூக விரோதிகள் திட்டமிட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மதுரை வருகிறார். இன்று, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரது வருகை,
டில்லி கலவரம், சமூக விரோதிகள், பா.ஜ., முருகன்

மதுரை :''டில்லியில் விவசாயிகள் போர்வையில், சமூக விரோதிகள் திட்டமிட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மதுரை வருகிறார். இன்று, மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவரது வருகை, நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும்.அவர், எங்களது அமைப்பு ரீதியான பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மட்டுமே வருகிறார். அரசியல் காரணம் இல்லை. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்ததைவிட தற்போது, பா.ஜ., ஆட்சியில் நாடு சிறப்பாக இருக்கிறது. பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. தன்னிறைவான பொருளாதாரத்துடன் உள்ளது.
'வேளாண் சட்டத்தை முழுமையாக படித்து விட்டால் நாடே பற்றி எரியும்' என ராகுல் எம்.பி., தெரிவித்துள்ளார். அந்த சட்டத்தை, ராகுல் முழுமையாக படிக்காததையே இது காட்டுகிறது. முழுமையாக படித்தவர்கள் ஆதரிக்கின்றனர். எதிர்த்தவர்கள் திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.டில்லியில், அது கலவரத்திலும் முடிந்துள்ளது. அவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை. விவசாயிகள் போர்வையில், சமூக விரோதிகளை திட்டமிட்டு களம் இறக்கியுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
30-ஜன-202122:17:19 IST Report Abuse
Siva இன்னும் கூட ஓட்டு போடும் பெருவாரியான மக்கள் ஊடகங்களில் செய்திகள் பத்திரிகை செய்திகள் என்ன ஏது என்று கூட தெரியாமல் இருக்கின்றனர். அது தான் திராவிட என்ற கட்சிகளின் பலம்..
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
30-ஜன-202122:14:55 IST Report Abuse
Siva நீங்களும் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்து தமிழிசை போல கட்சி வளக்கறீங்க. மோடி அரசின் திட்டங்கள் சாதனை பற்றி பேசத்தான் யாரும் இல்லை. களம் காணுவது அல்லது களமாடுவது ஏன் தமிழக பிஜேபி காரர்களுக்கு முடிவதில்லை.. தேசத்திற்கு நல்லது என்று தோன்றுவதை நடத்தி காட்ட யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை படாதவர் மோடி.. நீங்கள் எல்லாம் அதை மக்களுக்கு கொண்டு செல்ல முடியாதா.. அப்புறம் எதற்கு மாநில தலைவர் பதவி..
Rate this:
Cancel
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜன-202120:01:17 IST Report Abuse
jeya kumar India waiting for election to change everything... Everything
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X