அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சசிகலாவின் தியாகங்கள் எத்தனை?

Updated : ஜன 30, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (169)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :கோ. வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளுர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:'தவ வாழ்க்கை வாழ்ந்தவர், சசிகலா'என, முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார். உண்மை தான்! சாதாரண கேசட் கடை நடத்தி வந்த சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெ.,வின் நட்பை பெற செய்த தவம் மகத்தானது. ஜெ.,வின்
ithu ungal idam, இது உங்கள் இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



கோ. வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளுர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

'தவ வாழ்க்கை வாழ்ந்தவர், சசிகலா'என, முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார். உண்மை தான்! சாதாரண கேசட் கடை நடத்தி வந்த சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெ.,வின் நட்பை பெற செய்த தவம் மகத்தானது. ஜெ.,வின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்று, அவரின் வீட்டிற்குள் நுழைய சசிகலா செய்த தவம் கொஞ்சமா, நஞ்சமா?

ஜெ., ஆட்சியில் இருந்த காலங்களில் தனக்காகவும், குடும்ப உறவினருக்காகவும் தியாக உணர்வுடன், சசிகலா சொத்து வாங்கி வித்தாரே. .. அதை எவ்விதம் போற்றுவது? அமலாக்கத்துறையும், வருமான வரித்துறை யும், 70 இடங்களில், 'ரெய் டு'நடத்தி, சசிகலாவின்தவ வரலாற்றை நமக்குபறை சாற்றியதே.. அதை மறக்க முடியுமா ?


latest tamil news


மருத்துவமனையில், 75 நாட்களாக, ஜெ.,வை , யாரும் அண்ட விடாமல் கவனித்துக் கொண்டது, எப்பேர்ப்பட்ட தியாகம்? ஜெ., மறைந்தவுடன்,'அ.தி.மு.க.,வை காப்பாற்ற வேண்டும்' என்ற தியாகஉணர்வுடன், உடனே பொதுச் செயலராகி,முதல்வர் பதவிக்கு அடிபோட்டது சாதாரண தியாகமா? அவர் செய்த தியாகத்தால் தான், சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தன் தியாகசெயலை தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படித்தான், கோகுல இந்திரா உள்ளிட்ட சிலர் கூறுவர்.

அவர்களை பொறுத்தவரையில் திருப்பூர் குமரன்,வாஞ் சிநாதன்,காமராஜர் வ.உ.சி., போன்றோர் எல்லாம், தியாகிகள்அல்ல ; சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி தான், தியாகி!


Advertisement




வாசகர் கருத்து (169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
04-பிப்-202119:26:32 IST Report Abuse
dina வாழவேண்டிய வயதில் கணவனுடன் சேர்ந்து வாழாமல், தோழியுடன் வாழ்ந்து தோழியையும் தன்னுடன் இருந்தவர்களையும் குற்றவாளியாக்கிய பெருமைதான் சசிகலா அம்மையாருக்கு உண்டு, தியாகம் என்று சொல்ல முடியும் உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய். இதுதான் உண்மை........ இவர்களை எப்படி மக்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை.நாட்டு மக்களே தமிழர்கள் புத்திசாலிகள் கண்டவர்களால் நாம் ஏன் கெட்டபைர் சம்பாதிக்கவேண்டும்?
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
04-பிப்-202117:03:59 IST Report Abuse
Vijay D Ratnam திருக்குவளையில் பிறந்த ஒருத்தர் பிழைப்பு தேடி தேடி சென்னைக்கு திருட்டு ரயிலேறி வந்தார். அங்கிருந்து பதினைந்து கிமீ தூரத்தில் திருத்துறைப்பூண்டியில் பிறந்த இன்னொருத்தர் செகண்ட் க்ளாஸ் டிக்கட் எடுத்துக்கொண்டு ரயிலேறி வந்தார். ரெண்டு பேருமே ஏறுனது திருவாரூர் ஜங்க்ஷன், இறங்குனது சென்னை எக்மோர். இன்று அவரகள்,இருவர் குடும்பமும் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளது. உழைப்பு சார் உழைப்பு, கடினமான உழைப்பு. ஆக அரசியலில் இறங்க இருப்பவர்கள் திருவாரூர் ஜங்க்ஷனில் இருந்து புறப்படுங்கள்.
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
04-பிப்-202116:04:59 IST Report Abuse
ayyo paavam naan சசிகலாவை பார்த்து திமுக பயப்படுகிறதோ இல்லையோ தமிழக மக்களை பார்த்து நான் பயப்படுகிறேன். மேலே சொன்ன எல்லா புகழையும் கொண்ட ஒருவரை கண்டு ஒரு பிரதான எதிர்க்கட்சி பயப்படுகிறது என்றால், தமிழக மக்கள் எவ்வளவு "தரமான மக்கள் " எனபது புரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X