இந்திய வம்சாவளியினர் இருவருக்கு ஐ.நா.,வில் முக்கிய பொறுப்பு

Updated : ஜன 30, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (6)
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அரசு, ஐ.நா.,விற்கான துாதரக குழுவில், இந்திய வம்சாவளியினர் இருவரை முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசின் பல்வேறு துறைகளில் அதிக அளவில், இந்திய வம்சாவளியினரை நியமித்து வருகிறார். அமெரிக்காவிற்கான ஐ.நா., துாதரின் மூத்த கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சோஹினி சட்டர்ஜி, கொள்கை ஆலோசகராக, அதிதி கோரூர்
american indian, un, post, america, இந்திய வம்சாவளியினர், ஐ.நா., முக்கிய பதவி

வாஷிங்டன்: அமெரிக்க அரசு, ஐ.நா.,விற்கான துாதரக குழுவில், இந்திய வம்சாவளியினர் இருவரை முக்கிய பொறுப்புகளுக்கு நியமனம் செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அரசின் பல்வேறு துறைகளில் அதிக அளவில், இந்திய வம்சாவளியினரை நியமித்து வருகிறார். அமெரிக்காவிற்கான ஐ.நா., துாதரின் மூத்த கொள்கை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சோஹினி சட்டர்ஜி, கொள்கை ஆலோசகராக, அதிதி கோரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொலம்பியா பல்கலை சர்வதேச விவகாரங்கள் துறை பேராசிரியரான, சோஹினி சட்டர்ஜி, ஒபாமா அரசில், மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றியவர். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, ஏற்கனவே, இந்தியாவுடன் பேச்சு நடத்தியவர். இவர், 'பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, அமெரிக்கா உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தி, பயங்கரவாத தடுப்பு, பருவ நிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும்' என, சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


அமெரிக்காவிற்கான ஐ.நா., துாதர் லின்டா தாமஸ் கிரீன் பீல்டு, 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்ப்பது விவாதத்திற்குரியது' என, தெரிவித்திருந்தார். அவரது மூத்த ஆலோசகராக, இவ்விவகாரத்தில் இந்தியாவை ஆதரித்து வரும், சோஹினி சட்டர்ஜி நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.ஐ.நா.,வில், அமெரிக்க கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அதிதி கோரூர், இந்தியாவில், மக்கள் குடியேற்ற மையத்தில் பணியாற்றிஉள்ளார்.

இதற்கிடையே, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ், ''இந்தியா - பாக்., இடையிலான பிரச்னைகள் குறித்து, இரு தரப்பும் பேசி தீர்வு காண வேண்டும். இதில், ராணுவம் தலையிட்டால், இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலகிற்கே பாதிப்பு உண்டாகும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஜன-202104:49:18 IST Report Abuse
J.V. Iyer நன்று. மிக்க நன்று.
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
30-ஜன-202111:00:25 IST Report Abuse
தமிழன்தாய்நாட்டை விட்டு ஓடிப்போன இவங்களுக்கு ஏன் இவ்ளோ அமர்க்களம்.......
Rate this:
blocked user - blocked,மயோட்
30-ஜன-202112:53:38 IST Report Abuse
blocked userஅதை நாட்டை விட்டு சவுதிக்கு ஓடிப்போன தமிழன் சொல்கிறான்....
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
30-ஜன-202113:40:46 IST Report Abuse
தமிழன்நா என்ன சொல்றேன் நீ என்ன பேசுறா? உங்க ஆவாளா? எவ்ளோ முட்டு குடுக்கறீங்க . தேஷ் பக்தி உன்ககிட்டேதான் கத்துக்கணும்...
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
30-ஜன-202114:08:29 IST Report Abuse
Sanny இப்ப புரியுது ஏன் தமிழன் இன்னும் உருபடவில்லை என்று. தமிழனை, தமிழனே காட்டிக்கொடுப்பது கட்டபொம்மன் காலத்தில் இருந்தே........
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-ஜன-202104:18:11 IST Report Abuse
வெகுளி ஐ.நா. புகழ் டேனிலுக்கு என்ன பொறுப்பு கொடுப்பீங்க?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X