பொது செய்தி

இந்தியா

பார்லி., கேன்டீனில் இனி அசைவம் ரூ.700; சைவம் ரூ.100!

Updated : ஜன 30, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில், பார்லிமென்ட், 'கேன்டீன்' உணவுகளுக்கு அளிக்கப்பட்ட மானியம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு விற்பனையாகும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள கேன்டீனில் தயாரித்து விற்கப்படும் உணவு வகைகளுக்கு, மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. இதனால், மிகக் குறைவான விலைக்கு இங்கு உணவுகள் விற்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு
Parliament Canteen, subsidy, stopped

புதுடில்லி: டில்லியில், பார்லிமென்ட், 'கேன்டீன்' உணவுகளுக்கு அளிக்கப்பட்ட மானியம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு விற்பனையாகும் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள கேன்டீனில் தயாரித்து விற்கப்படும் உணவு வகைகளுக்கு, மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. இதனால், மிகக் குறைவான விலைக்கு இங்கு உணவுகள் விற்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மானியம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், கேன்டீனின் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news


குறைந்தபட்சமாக சப்பாத்தி ரூ.3க்கு விற்பனையாகிறது. அதிகபட்சமாக அசைவ உணவு பபெட் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சைவ உணவு பபெட் ரூ.100க்கும் கிடைக்கும். முன்பு ரூ.65க்கு விற்பனையான ஐதராபாத் மட்டன் பிரியாணி ரூ.150 எனவும், ரூ12க்கு விற்பனையான வேகவைக்கப்பட்ட காய்கறிகள் ரூ.50 எனவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வேக்கு பதிலாக, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கேன்டீனை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது. மானியம் ரத்து செய்யப்பட்டதால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ8 கோடி வரை மிச்சமாகும்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
31-ஜன-202106:02:10 IST Report Abuse
meenakshisundaram திமுக எம்பீக்கள் இதை எதிர்த்து போராடவேண்டும் அன்னன் வைகோ மற்றும் ஜால்றா திருமா தலைமையில் .-இது சனாதன தர்மத்தின் சதி என்று ??
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
31-ஜன-202105:58:55 IST Report Abuse
Girija இந்த ஏழைகளுக்கு இலவச அம்மா உணவகம் திறக்காதது ஏன்? இந்த விலையில் சாப்பாடு வெளியில் கிடைக்குமா? இதற்கு பதில் ஓசியில் கொடுக்கலாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-ஜன-202104:42:44 IST Report Abuse
J.V. Iyer எவ்வளவு விலை ஏற்றினாலும் திமுக எம்பீக்கள் மற்றவர்கள் தலைகளை தடவி இலவசமாகத்தான் சாப்பிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X