பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் கொரோனாவுக்கு இன்று வயது 1: கேரளாவில் ருத்ர தாண்டவம்

Updated : ஜன 30, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
நாகர்கோவில்; இந்தியாவில் முதல் நோயாளி கேரள மாநிலம் திருச்சூரில் கண்டறியப்பட்டு இன்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. அம்மாநிலத்தில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடுவதால் அரசும், மக்களும் திணறுகின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளுக்காக தொடக்கத்தில் கேரள அரசு உலக அளவில் பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நிலைமை தலை கீழாக மாறி விட்டது. முன்கூட்டியே தளர்வுகள், ஓணம் பண்டிகை, உள்ளாட்சி
ndia,kerala,இந்தியா,கேரளா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19,

நாகர்கோவில்; இந்தியாவில் முதல் நோயாளி கேரள மாநிலம் திருச்சூரில் கண்டறியப்பட்டு இன்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. அம்மாநிலத்தில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடுவதால் அரசும், மக்களும் திணறுகின்றனர்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தொடக்கத்தில் கேரள அரசு உலக அளவில் பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நிலைமை தலை கீழாக மாறி விட்டது. முன்கூட்டியே தளர்வுகள், ஓணம் பண்டிகை, உள்ளாட்சி தேர்தல் என பல காரணங்களால் கொரோனா பரவலில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.மிகச்சிறிய மாநிலத்தில் தினமும் ஆறாயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இந்தியாவின் தினசரி நோய் பாதிப்பில் பாதி அளவு பேர் கேரளாவில் உள்ளனர்.
நாட்டின் மொத்த பாதிப்பில் மூன்றாவது இடத்திலும், சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடத்திலும் உள்ளது.நேற்றைய நிலவவரப்படி கேரளாவில் 72,392 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதிக நோயாளிகள் சிகிச்சை பெறும் மாவட்டங்களில் கேரளாவின் எர்ணாகுளம் இரண்டாவது (10,873) இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே முதலிடத்தில் (13014) உள்ளது.


latest tamil news




கடந்த ஐந்து நாளில் இந்தியாவில் மும்பை, எர்ணாகுளம், கோழிக்கோடு, கோட்டயம், திருவனந்தபுரம் என ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமாக உள்ளது. இதில் 4 மாவட்டங்கள் கேரளாவில் உள்ளது. வரும் நாட்களில் கேரளாவில் நோய் பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஏழாயிரத்தை கடக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கேரள அரசு தினசரி பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும், பிப்.10வரை நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் 25 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
31-ஜன-202101:04:29 IST Report Abuse
தல புராணம் அவர்கள் உண்மை எண்ணிக்கையை உள்ளபடி சொல்கிறார்கள்.. தமிழ் நாட்டில் குட்கா பாஸ்கர் சொல்படி மருமக்காய்ச்சல், சளிக்காய்ச்சல், மூச்சுத்திணறல், நிமோனியா, நுரையீரல் தொற்று, ஃப்ளூ ன்னு மாத்தி பதிவு செய்யிறாங்க.. அதான் வித்தியாசம்.. பானிபூரி மாகாணங்களில் செத்தா பதிவு கூட செய்யறதில்லை இது தான் நிலவரம். மொத்த இந்தியாவிலேயே பதிவாகும் சாவுகள் வெறும் 3.6% தான் என்று இந்திய பிறப்பு இறப்பு பதிவுத்துறை சொல்கிறது.
Rate this:
Cancel
vsraj - COIMBATORE,இந்தியா
30-ஜன-202120:32:57 IST Report Abuse
vsraj கேரளாவை பாருங்கள் என்று தமிழ் நாட்டை கிண்டலடித்த நபர்கள் எங்கே ?
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
30-ஜன-202117:22:28 IST Report Abuse
Rajasekaran கேரள மக்களை இந்நோயின் கோரப்பிடியிலிருந்து காப்பாற்ற, சபரிமலை ஐயப்பனும் , குருவாயூரப்பனும் , சோட்டாணிக்கரா பகவதி அம்மனும், திருவநந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமியும் அருள் புரிய அனைவரும் பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X