தமிழகத்தில் சுற்றுபயணம் செய்த காங்.- எம்.பி. ராகுல் சமையல் கலைஞர்களுடன் தயிர் பச்சடி தயாரித்து காளான் பிரியாணி சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அகில இந்திய காங். முன்னாள் தலைவரும் எம்.பி. யுமான ராகுல் கடந்த 25ல் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தகர கொட்டாய் என்ற இடத்தில் மண்பானை சமையல் ஓட்டலில் அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் பாதுகாப்பு காரணமாக ராகுல் மதிய உணவு சாப்பிடும் இடம் அரவக்குறிச்சி அருகே பெத்தாங்கோட்டை பிரிவு கொக்காட்டிபட்டியில் கருப்பசாமி என்பவரது தோட்டத்தில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு புதுக்கோட்டை மாவட்டம் வீரதிருமங்கலத்தை சேர்ந்த 'கிராமிய சமையல்' என்ற பெயரில் 'யு-டியூப்' சேனல் நடத்தி வரும் ஐந்து பேர் காளான் பிரியாணி கத்தரிக்காய் கூட்டு ஆகியவற்றை சமைத்து வைத்திருந்தனர்.அங்கு சென்ற ராகுல் வெங்காய தயிர் பச்சடி தயார் செய்தார். பின் சமையல் கலைஞர்களுடன் அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்டார்.அப்போது அவர் சமையல் கலைஞர்களுடன் தமிழில் பேசி மகிழ்ந்தார். அந்த வீடியோவை சமையல் கலைஞர்கள் யு-டியூப் சேனலில் தற்போது பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE