அமெரிக்காவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி சிலை

Updated : ஜன 30, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
வாஷிங்டன்: கலிபோர்னியாவில் உள்ள மகாத்மா காந்தியின் உலோக சிலை மர்மநபர்களால் சேதப் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மத்திய பூங்கா டேவிஸ் நகரின் ஓர் முக்கிய அங்கமாக விளங்குவதாகும். இங்கு அனுதினமும் காலை, மாலை வேளைகளில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வர். மகாத்மா
அமெரிக்கா, மகாத்மாகாந்தி, மஹாத்மாகாந்தி, காந்தி, சிலை

வாஷிங்டன்: கலிபோர்னியாவில் உள்ள மகாத்மா காந்தியின் உலோக சிலை மர்மநபர்களால் சேதப் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மத்திய பூங்கா டேவிஸ் நகரின் ஓர் முக்கிய அங்கமாக விளங்குவதாகும். இங்கு அனுதினமும் காலை, மாலை வேளைகளில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வர். மகாத்மா காந்தியின் நினைவாக இங்கு இந்த பூங்காவில் ஆறு அடி உயரம், 294 கிலோ எடை கொண்ட பிரான்ஸ் உலோக சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் அடையாளமாக திகழும் காந்திசிலை மர்ம நபர்கள் சிலரால் சில இடங்களில் சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று(ஜன., 30) காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா என்ற கோணத்தில் கலிபோர்னியா மாகாண காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது அமெரிக்காவில் தலைவர்கள் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது வாடிக்கையாகிவிட்டது.


latest tamil news




இந்தப் பூங்காவின் ஊழியர் ஜனவரி 27-ஆம் தேதி காலை வேளையில் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு போலீசாரிடம் தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து இந்த சிலை தற்காலிகமாக பூங்காவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சேதமான இடங்களை மீண்டும் சரிசெய்து இந்த சிலை மீண்டும் பூங்காவில் நிறுவப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news




கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அரசு கலிபோர்னியா மாகாண அரசுக்கு இந்த சிலையை பரிசு அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த காந்தி சிலையை பூங்காவில் நிறுவ காந்திக்கு எதிரான சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்பையும் மீறி இந்த சிலை அப்போது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
31-ஜன-202109:46:44 IST Report Abuse
DHASARATHAN நாட்டைத் துண்டாடிய மகான்...
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
31-ஜன-202106:33:43 IST Report Abuse
 Muruga Vel பொது இடங்களில் சிலை வைப்பவர்கள் சிலை பராமரிக்கும் பணியையும் பாதுகாப்பு பணியையும் மேற்கொள்ள வேண்டும். லாகூர் நகரில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை சமீபத்தில் சேதப்படுத்த பட்டது ..திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத ஸ்வாமி கோவில் நுழைவு வாயில் அருகே பெரியார் சிலையை பாதுகாக்க ஒரு போலீஸ் ஸ்டேஷன் செயல் படுகிறது ..
Rate this:
Cancel
31-ஜன-202104:57:06 IST Report Abuse
Lalitha Iyer Madurai To hide farmers protests. .the party is trying all the means to divert people attention...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X