டிராக்டர் பேரணியில் தாக்குதல்: காயமடைந்த போலீசார் போராட்டம்

Updated : ஜன 30, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயமடைந்த டில்லி போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதனை தடுக்க முயன்ற போது, போராட்டக்காரர்கள், கத்தி மற்றும் கம்புகளை கொண்டு போலீசாரை
டில்லி போலீஸ்,  காயம், விவசாயிகள், போராட்டம்,

புதுடில்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயமடைந்த டில்லி போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.


latest tamil news




வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதனை தடுக்க முயன்ற போது, போராட்டக்காரர்கள், கத்தி மற்றும் கம்புகளை கொண்டு போலீசாரை கடுமையாக தாக்கினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil news


Advertisement


இந்நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டில்லி போலீசார், ஓய்வு பெற்ற போலீசார், காயமடைந்த போலீசாரின் குடும்பத்தினர் இணைந்து டில்லியில் ஷாகீதி பூங்காவில் போராட்டம் நடத்தினர்.


latest tamil news


இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமை காவலர் அசோக் குமார் கூறுகையில், செங்கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். நுழைவு வாயிலில் பணியில் இருந்த போது, செங்கோட்டையில் கொடியேற்றியவர்களை, வெளியேற்ற முயன்றோம். அப்போது அவர்கள் எங்களை தாக்கினர். கத்தி மற்றும் கம்புகளை கொண்டு தாக்கினர். இதில், தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


பிஎஸ் மாடல் நகர் போலீஸ் ஸ்டேசனில் தலைமை காவலராக பணிபுரியும் சுனிதா கூறுகையில், முபாராகா சவுக் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டது. அங்கு துணை மற்றும் உதவி கமிஷனர்களும் பணியில் இருந்தனர். அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டும் செல்லுமாறு போராட்டக்காரர்களிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர்கள் தடுப்புகளை உடைத்து கொண்டு எங்களை கடுமையாக தாக்கினர். வாகனங்களை சேதப்படுத்தினர். அவர்கள் எங்களை தாக்குவார்கள் என தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
31-ஜன-202121:31:25 IST Report Abuse
Venkataramanan Thiru ஒன்னு சய டேட் வியூஸ்.மக்களுக்காக போலீஸ் . அதை அரசியல் வாதிகள் "பவர்" என்ற பெயரில் சொந்த நலுனுக்காக பயன்படுத்திடுவதை போலிசு ஏற்றுக்கொள்ளக்கூடாது .ஒற்றமையாமை தேவை.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
31-ஜன-202112:17:06 IST Report Abuse
Ram விவசாயம் என்பது மற்றவை போல் ஒரு தொழில் , ஆகையால் அரசாங்கத்திடம் இவளவு விலைதான் நிர்ணயிக்கவேண்டும் , எங்கள் பொருளையெல்லாம் வித்துத்தாறவேண்டும் என்று கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது. இனியும் காவலர்கள் அமைதி காக்க கூடாது , அடித்தாள் திருப்பிடியுங்கள்
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
31-ஜன-202107:29:31 IST Report Abuse
தமிழ் மைந்தன் விவசாயிகள் என்ற பெயரில் இத்தனை நாட்கள் போராட்டம் நடத்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கைக்கூலிகள் மற்றும் குண்டர்களையும் இவர்களுக்கு பண உதவி செய்த வெளிநாட்டு கிருஸ்தவ அமைப்புகளையும் உடனே நாடு கடத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X