பொது செய்தி

இந்தியா

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைக்கு பிறகு ரிலீசான சசிகலா இன்று டிஸ்சார்ஜ்

Updated : ஜன 31, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
பெங்களூரு: கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, இன்று (ஜன.,31) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27ல், விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு
Sasikala,சசிகலா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, டிஸ்சார்ஜ்,

பெங்களூரு: கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, இன்று (ஜன.,31) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27ல், விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.


latest tamil news




இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்றுடன் சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. செயற்கை சுவாசமின்றி சுவாசித்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும், சசிகலா டிஸ்சார்ஜ் ஆகலாம் என பரிந்துரை செய்ததை தொடர்ந்து, அவர் இன்று (ஜன.,31) டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
31-ஜன-202108:30:16 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ரொம்ப முக்கியம்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
31-ஜன-202107:32:26 IST Report Abuse
தமிழ் மைந்தன் சசிகலா வெளியே வந்துவிட்டார்......இனி திமுகவின் அதிருப்தியாளர்கள் இவரை சந்திப்பார்கள்.......இவரின் புதிய கட்சியில் முக்கிய பதவி கிடைக்கலாம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
31-ஜன-202106:38:14 IST Report Abuse
 Muruga Vel இனி அந்த அம்மணி கூட சிலிண்டரும் வலம் வருமா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X