வேளாண் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்த பிரச்னையில்லை: பிரதமர் மோடி மீண்டும் அறிவிப்பு

Updated : பிப் 01, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
வேளாண் சட்டங்களுக்கு எதிரான, விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ''ஏற்கனவே அறிவித்தபடி, புதிய வேளாண்சட்டங்களை, 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி
வேளாண் சட்டம், பிரச்னையில்லை, பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களுக்கு எதிரான, விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ''ஏற்கனவே அறிவித்தபடி, புதிய வேளாண்சட்டங்களை, 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு இதுவரை, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், 11 சுற்று பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.பார்லிமென்ட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை பற்றியும், செங்கோட்டையில் சீக்கீய கொடி ஏற்றப்பட்டது குறித்தும் பேசப்பட்டது. விவசாயிகள் பிரச்னையை அரசு, திறந்த மனதுடன் அணுகுகிறது; வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என்ற அரசின் முடிவில் மாற்றமில்லை; சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றி அரசு அளித்த உறுதிமொழிகளும் அப்படியேதான் உள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால், குடியரசு தின வன்முறையை பொறுத்தமட்டில் சட்டம் அதன் கடமையைச் செய்யும் என மோடி உறுதிபட தெரிவித்தார்

மத்திய பட்ஜெட்
'வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என்பதை, விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த, 22ம் தேதி நடந்த பேச்சின்போது, 'வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது. அதே நேரத்தில், 18 மாதங்களுக்கு, இந்த சட்டங்களை நிறுத்தி வைக்க தயார்.தொலைபேசியில் என்னை அழைத்தால் போதும்; பேச்சுக்கு தயாராக உள்ளோம்' என, மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியிருந்தார்.இந்நிலையில், குடியரசு தினமான, 26ம் தேதி, டில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, வன்முறை வெடித்தது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பார்லிமென்டில் நேற்று முன்தினம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையை, 18 எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் நேற்று இந்த கூட்டம் நடந்தது.

இதில், பிரதமர் மோடி பேசியதாவது:கடந்த, 22ம் தேதி நடந்த பேச்சின்போது, விவசாய துறை அமைச்சர் கூறியதே, மத்திய அரசின் நிலை; அதில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளை திறந்த மனதுடன், மத்திய அரசு கையாண்டு வருகிறது.விவசாய அமைச்சர் தோமர் கூறியதுபோல், தொலைபேசியில் அழைத்தால் போதும்; பேச்சுக்கு தயாராக உள்ளோம்.ஏற்கனவே அறிவித்த படி, விவசாய சட்டங்களை, 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அரசு தயாராக உள்ளது. டில்லியில், குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை குறித்து, சட்டம் தன் கடமையை செய்யும்.இவ்வாறு, அவர் பேசினார்.


விவாதம்அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்ததும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நிருபர்களிடம் கூறியதாவது:விவசாயிகள் போராட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை, அனைத்து கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்; இதை அரசு ஏற்றது.எதிர்க்கட்சி தலைவர்களிடம் இதுகுறித்து பேசிய, பிரதமர் மோடி, பல்வேறு உறுதிகளை அளித்தார். அதன்படி, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்த விஷயத்தில், முற்றி லும் திறந்த மனதுடன் இருப்பதாக தெரிவித்தார்.மிக குறைந்த எண்ணிக்கையிலான, எம்.பி.,க்களை உடைய கட்சிகளும், விவாதங்களில் அதிக நேரம் பங்கெடுக்க வேண்டுமென்ற கோரிக்கை, நியாயமானது என்றும், அவர்களுக்கும் போதிய நேரம் ஒதுக்கும்படியும் வலியுறுத்தினார்.தடுப்பூசி தயாரிப்பில், உலக நாடுகளுக்கு உதவுவதிலும், நாடு முழுதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக, அனைத்து கட்சித் தலைவர்களும், பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.


மகளிர் மசோதா வருமா?
டில்லியில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பினாகி மிஸ்ரா கூறியதாவது:சட்டசபை மற்றும் பார்லிமென்டில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை இந்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டும். ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் மட்டுமே, இதை செயல்படுத்தி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலின்போது, ஒடிசாவில், ஏழு பெண் வேட்பாளர்களை நிறுத்தினோம். அதில் ஐந்து பேர் வென்றனர். பா.ஜ., சார்பில், இரண்டு பேர் வென்றனர். அதன்படி, ஒடிசாவில் மட்டும், 33 சதவீத இடங்களில், பெண்கள் வென்றுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

மகளிர் மசோதாவுக்கு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

- நமது டில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
31-ஜன-202123:04:27 IST Report Abuse
PRAKASH.P 18 மாசத்துக்கு அப்பறம் உங்க ஆட்சி இருக்காதா? இப்ப முழுசா இதை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.அப்பறம் அனைவரின் கருத்தையும் உள்ளடக்கிய தரமான சட்டம் கொண்டு வரலாம்.. ஏன் இவ்வளவு துயரம் அனைவருக்கும்
Rate this:
Cancel
31-ஜன-202118:34:52 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் வீட்டை நிர்வகிக்க தெரியாதவன் என்ன செய்வான் ? கடன் வாங்கி காலம் தாளுவான் , கடன் அதிகம் ஆகும் போது என்ன செய்வான் முன்னோர் சேர்த்து வைத்து விட்டு சென்ற சொத்துக்களை விற்று அதில் வரும் பணத்தை கொண்டு காலம் தளுவான் , இப்போ நாட்டில் அது தானே நடக்கிறது , புரிஞ்சவங்க புத்திசாலி , புரியாதவர்களுக்கு வரும் காலங்கள் புரிய வைக்கும்
Rate this:
Cancel
prabhaharan.v - kovilpatti,இந்தியா
31-ஜன-202114:33:12 IST Report Abuse
prabhaharan.v Kitchenless India. Follow Naturopathic Food. Cutshort our Intake. Dinnerless Night. Great solution to new India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X