பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு மூன்றாவது தடுப்பூசி தயார்!

Updated : பிப் 01, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லிநம் நாட்டில், கொரோனா வைரசுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகள், ஏற்கனவே அவசர கால பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மூன்றாவதாக, 'கோவாவேக்ஸ்' என்ற தடுப்பூசி மருந்தும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்காக, 'சீரம் இந்தியா' நிறுவனம், மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து,
கொரோனா, தடுப்பூசி ,சீரம்,  சீரம் இந்தியா, தலைமைச் செயல் அதிகாரி, ஆதர் பூனாவாலா,

புதுடில்லிநம் நாட்டில், கொரோனா வைரசுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகள், ஏற்கனவே அவசர கால பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், மூன்றாவதாக, 'கோவாவேக்ஸ்' என்ற தடுப்பூசி மருந்தும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்காக, 'சீரம் இந்தியா' நிறுவனம், மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து, 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது.இந்த தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்த, 'சீரம் இந்தியா' நிறுவனம் பெற்றுள்ளது. இதேபோல, ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது.கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசி மருந்துகளுக்கு, அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில், 'கோவிஷீல்ட்' மற்றும் 'கோவேக்ஸின்' கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசி பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியது. இந்த மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்யும் உரிமையை, புனேவில் உள்ள சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இதே போல், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவா வேக்ஸ்' தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உரிமையையும் சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்திருப்பதாக, சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா தெரிவித்தார்.

இலக்கு நிர்ணயம்


இதையடுத்து, கடந்த, 16 முதல், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை, 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜூனுக்குள், மூன்று கோடி பேருக்கு, தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, நோவாவேக்ஸ் நிறுவனம், 'கோவாவேக்ஸ்' என்ற பெயரில், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளதாக, சமீபத்தில் அறிவித்தது. பிரிட்டனில் நடத்திய ஆய்வில், அங்கு உருவான உருமாறிய வீரிய கொரோனா வைரசை தடுப்பதில், இந்த தடுப்பூசி, 89 சதவீத ஆற்றலுடன் செயல்படுவதாக தெரியவந்தது.
இந்நிலையில், சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா, நேற்று கூறியதாவது:நோவாவேக்ஸ் நிறுவனத்தின், கோவாவேக்ஸ் கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை, சீரம் நிறுவனம் பெற்று உள்ளது. இதற்காக, இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.


விண்ணப்பம்


பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், கோவாவேக்ஸ் மருந்து, மிகச் சிறப்பாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில், தன்னார்வலர்களுக்கு, இந்த தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதற்கான அனுமதி கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின், ஜூனில், கோவாவேக்ஸ் தடுப்பூசி மருந்து பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

சீரம் நிறுவனம், உலகஅளவில் தடுப்பூசி மருந்து தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


ரஷ்ய தடுப்பூசி



ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் - 5' கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை, ரெட்டீஸ் லேபாரேட்டரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி மருந்தின் ஆய்வுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. மார்ச்சில், தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என, ரெட்டீஸ் லேபாரேட்டரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.எனினும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, இந்த தடுப்பூசிக்கு அனுமதி அளித்தால் மட்டுமே பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.


200 கோடி 'டோஸ்'


நோவாவேக்ஸ் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளில், 'கோவாவேக்ஸ்' தடுப்பூசி மருந்தை தயாரிக்கிறது. ஆண்டுக்கு, 200 கோடி, 'டோஸ்' தடுப்பூசி மருந்து தயாரிக்கப்
படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar G - kuwait,குவைத்
01-பிப்-202107:51:26 IST Report Abuse
Shankar G யோவ் உடம்பு நல்லாயிருந்த ஏன் போட்டுக்கணும். நீ அறிவு இருந்தா இப்படி பேசுவிய? ஜி பத்தி படி அவர் யோகா மாஸ்டர் அவருக்கு இயற்கையா என்ன பண்ணனும்னு தெரியும். அவரு ஒன்னும் யாரையும் ஊசி போட்டுக்கணும் வற்புறுத்தலை புரியுதா
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
31-ஜன-202116:27:50 IST Report Abuse
Murthy நல்ல செய்தி...... வைரஸும் அதற்க்கு ஏற்றாற்போல் தன்னை வடிவமைத்து கொள்ளாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
31-ஜன-202105:00:11 IST Report Abuse
கும்புடுறேன் சாமி ஆயிரம் தடுப்பூசிகள் வந்தாலும் ஜீ கடைசியாத்தான் போட்டுக்குவார் , தனக்கு ஏதாவது ஆயிருமோன்னு அவ்வளவு பயம்
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
31-ஜன-202117:21:55 IST Report Abuse
vadiveluவெறுப்பு அறியாமைக்கு வழி வகுத்து விட்டது.முதலில் போட்டுகொண்டு இருந்தால் இன்னும் அதிக குமுறல் செய்து இருப்பார்கள் இந்த கூட்டம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X