அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்விக்கடனும் ரத்து: ஸ்டாலின் உறுதி

Updated : பிப் 01, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
வேலூர்:''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும்,'' என, ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., சார்பில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் நேற்று நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கு பெறப்படும் மனுக்கள், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில்
கல்விக்கடன், ஸ்டாலின், மு.க.ஸ்டாலின், திமுக, தி.மு.க.,

வேலூர்:''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும்,'' என, ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., சார்பில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி, வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் நேற்று நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: இங்கு பெறப்படும் மனுக்கள், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 100 நாட்களில் நிறைவேற்றப்படும்.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். முதியோர் உதவித்தொகை, ஆதவற்றோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவிகள், கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தவுடன், கல்விக்கடன், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய, நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். கடந்த எம்.பி., தேர்தலில், நான் கொடுத்த இந்த வாக்குறுதிகளை மறக்கவில்லை. இந்த கடன்கள் ரத்து செய்வதால், அரசு கடனில் மூழ்கி விடும் என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தத்தான், இந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.


'தி.மு.க., அரசு கேட்காமலும் உதவும்


'தி.மு.க.,விடம் கேட்டால் தான், அரசின் காதுகளில் விழுகிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில், மனு கொடுத்திருந்தார். உடனடியாக தி.மு.க., உதவும் என, உறுதி அளித்தேன்.பதறிய அரசு, இரண்டு லட்சம் ரூபாயை வழங்கி உள்ளது. தி.மு.க.,விடம் கேட்டால் தான், அரசின் காதுகளில் விழுகிறது. நாளை அமையும் தி.மு.க., அரசு, கேட்காமலும் உதவும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seenu - Chennai,இந்தியா
01-பிப்-202113:18:19 IST Report Abuse
Seenu ஆட்சிக்கு வந்ததும் அதுல ஒரு ட்விஸ்ட் வைப்பானுங்க. எல்லாருக்கும் கிடையாதுன்னு சொல்லி சில பல கண்டிஷன்களை சொல்லி, அப்புறம் அந்த போர்மாலிட்டீஸ் எல்லாம் செய்றதுக்குள்ள உங்க போக்கெட்டுல இருக்கற கொஞ்ச நஞ்ச காசும் காலியாகி போயிட்டு இருக்கும். கடைசியில நூறு ரூபாய்க்கு வெறும் பத்து ரூபாதான் உங்க கைக்கு வரும் மீதி தொண்ணூறு ரூபாய் அவனுங்க கட்சிக்காரனுங்க கல்லா கட்டியிருப்பானுங்க.
Rate this:
Cancel
Seenu - Chennai,இந்தியா
01-பிப்-202113:12:42 IST Report Abuse
Seenu அடிச்சி விடு அடிச்சி விடு எவன் அப்பன் வீட்டு பணம் எதையாவது செய்து சி ம் ஆயிடனும்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
01-பிப்-202100:39:41 IST Report Abuse
unmaitamil கடந்தாண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலில், நாங்கள் வெற்றிபெற்றால் நகைக்கடன் தள்ளுபடி என்று கதை விட்டார். அதுவே நடக்கவில்லை. இப்போ கல்விக்கடன் தள்ளுபடி என்ற அடுத்த ஏமாற்று ??? ஏழை மாணவர்கள் நன்கு படித்து முன்னேற வழங்கப்பட்டது கல்விக்கடன் . முன்னேறியவன் கடனை அடைக்கவேண்டும். அந்த பணம் அடுத்து வருபவனுக்கு வாழ்வில் முன்னேற ஊக்கத்தை தரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X