பொது செய்தி

இந்தியா

பேரீச்சம் பழம் இறக்குமதி தகவல் கேட்கிறது கேரளா

Updated : ஜன 30, 2021 | Added : ஜன 30, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
திருவனந்தபுரம்:பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விபரங்களை அளிக்கும்படி, சுங்கத் துறையிடம், கேரள அரசு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்டுள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும்,

திருவனந்தபுரம்:பேரீச்சம் பழம் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விபரங்களை அளிக்கும்படி, சுங்கத் துறையிடம், கேரள அரசு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல் கேட்டுள்ளது.latest tamil news


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துாதரகம் மூலம், துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது; இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.

இந்நிலையில், இந்த துாதரகத்தின் பெயரில், 2017ம் ஆண்டில், 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழம் மற்றும் 2020ம் ஆண்டில், 4,000 கிலோ எடையுள்ள புத்தகங்கள், யு.ஏ.இ.,யில், இருந்து வந்தன. துாதரகத்தின் பெயரில் வரவழைக்கப்படும் பொருட்களுக்கு, சுங்க வரி செலுத்தத் தேவை இல்லை.


latest tamil news


'இந்த சலுகையை பயன்படுத்தி, கேரள அரசின் சக்திவாய்ந்த ஒருவர், இந்தப் பொருட்களை வரவழைத்து பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், மோசடி நடந்துள்ளது' என, சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன.இந்நிலையில், கேரள அரசு சார்பில், சுங்கத் துறையிடம் இருந்து, சில தகவல்கள் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

அதில், சுங்கத் துறை மூலமாக எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்பட்டுஉள்ளன. மத்திய அரசு துறையிடம் இருந்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மாநில அரச தகவல் கேட்பது இதுவே முதல்முறையாக இருக்கும் என, கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajamsam - Jeddah,சவுதி அரேபியா
31-ஜன-202110:59:21 IST Report Abuse
Rajamsam அப்படின்னா கண்காணிப்பு இல்லை .. அதற்குரிய தகுதியும் திறமையும் இல்லை ..எந்த அரசுக்கு என்று சொல்லவா வேண்டும்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
31-ஜன-202110:07:09 IST Report Abuse
Ellamman தகவல் அறியும் சட்ட விஷயத்தில் கேரளா அரசு பொதுமக்கள் கேட்கும் தகவல்களுக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிலும் குறிப்பாக தமிழகத்தை ஒப்பிடும்போது தகவல்களை பகிர்வதில் முன்னோடியாக இருக்கிறது.. அவர்களே அந்த சட்டத்தை உபயோகித்து மத்திய அரசை கேள்வி கேட்டுள்ளது ஒரு நல்ல ஜனநாயக முன்னெடுப்பாக தான் கருதுகிறேன்.... தங்க கடத்தல் நடந்துள்ளது...அதை துறை ரீதியாக அணுகி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது சுங்க சட்டத்தின் படி நடவடிக்கை எடுப்பது மட்டுமே சரியான வழிமுறை...மத்திய அரசு சுங்க இலாக்காவை வைத்துக்கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர்களை உபயோகப்படுத்தி அரசியல் அழுத்தம் கொடுப்பது நியாயம் என்றால்......அதை அரசியல் சுயலாபத்திற்கு பயன்படுத்துவது ஒரு கேரளா அரசின் இந்த செய்கையும் நியாயம் என்றே நான் கருதுவேன்...
Rate this:
Santhosh Kumar - Chennai,இந்தியா
31-ஜன-202113:48:45 IST Report Abuse
Santhosh Kumarமுட்டாள்தனமான விமர்சனம் என்று கருதுகிறேன். சுங்க இலாக்கா மத்திய அரசிடம் இருந்தாலும், மாநிலத்திற்கும் என்ன வருகிறது என்ன போகிறது என்பது ஒரு மணிலா அரசிற்க்கே தெரியவில்லை என்றால், அதுவும் கேட்டு வாங்கப்பட்ட வேறு ஒரு நாட்டின் துணை தூதரகம் மூலமாக என்றால், எப்படி? எந்த ஒரு அரசும்தான் விவரம் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டுமே ஒழிய, கேட்டு வாங்கும் நிலைமையில் இருக்கக் கூடாது, அது மத்திய அரசின் கீழ் வந்தாலும், என்பது என் எண்ணம்...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
31-ஜன-202117:09:33 IST Report Abuse
EllammanReconciliation தான் இங்கு பிரச்சினை...அதை சரி செய்ய தங்கள் கேட்டுள்ளதாக நான் கருதுகிறேன்...இதை முட்டாள்தனமான விமர்சனம் என்று நினைப்பவரின் எண்ணத்தை நேராக்கினா நல்லது...என்ன வருகிறது....என்ன போகிறது என்பது மட்டும் கேட்கப்படவில்லை... எதனை வழக்குகள் சுங்க இலக்கவினால் பதியப்பட்டுள்ளது என்ற தகவல் மாநில அரசிற்கு தெரிய வாய்ப்பில்லை... அதை தான் கேட்டுள்ளதாக இந்த செய்தி கூறுகிறது... இதில் யார் முட்டாள்??...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
31-ஜன-202117:11:10 IST Report Abuse
Ellammanமுழுதுமாக புரிந்துகொள்ளாமல் அரைகுறை விமர்சனம் அதுவும் தனிப்பட்ட்ட விதத்தில் விமர்சனம் ஏன் செய்கிறார்கள்?? அதை ஏன் இந்த தளம் அனுமதிக்கிறது? சுங்க இழக்க எதனை வழக்கு பதிந்துள்ளது என்ற விவிகாரம் மாநில அரசுக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த தகவலை தான் கேட்டுள்ளதாக தெரிகிட்டது.. இதில் முட்டாள்தனம் எங்கிருந்து வந்தது??...
Rate this:
Cancel
31-ஜன-202110:01:09 IST Report Abuse
ஆரூர் ரங் படித்த கேரளத்தவரும் இந்த கடத்தல் கம்மிகளுக்கே ஓட்டுப் போடுவதால்தான் ஒட்டுமொத்த மலையாளி சமூகத்திற்கே கெட்ட👎 பெயர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X