அரசியல் செய்தி

தமிழ்நாடு

தயிர் பச்சடி தயார் செய்து பிரியாணி சாப்பிட்ட ராகுல்

Added : ஜன 31, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
தமிழகத்தில் சுற்றுபயணம் செய்த காங்.- எம்.பி. ராகுல் சமையல் கலைஞர்களுடன் தயிர் பச்சடி தயாரித்து காளான் பிரியாணி சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அகில இந்திய காங். முன்னாள் தலைவரும் எம்.பி. யுமான ராகுல் கடந்த 25ல் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தகர கொட்டாய் என்ற இடத்தில் மண்பானை சமையல்
 தயிர் பச்சடி தயார் செய்து பிரியாணி சாப்பிட்ட ராகுல்

தமிழகத்தில் சுற்றுபயணம் செய்த காங்.- எம்.பி. ராகுல் சமையல் கலைஞர்களுடன் தயிர் பச்சடி தயாரித்து காளான் பிரியாணி சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அகில இந்திய காங். முன்னாள் தலைவரும் எம்.பி. யுமான ராகுல் கடந்த 25ல் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தகர கொட்டாய் என்ற இடத்தில் மண்பானை சமையல் ஓட்டலில் அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு காரணமாக ராகுல் மதிய உணவு சாப்பிடும் இடம் அரவக்குறிச்சி அருகே பெத்தாங்கோட்டை பிரிவு கொக்காட்டிபட்டியில் கருப்பசாமி என்பவரது தோட்டத்தில் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு புதுக்கோட்டை மாவட்டம் வீரதிருமங்கலத்தை சேர்ந்த 'கிராமிய சமையல்' என்ற பெயரில் 'யு-டியூப்' சேனல் நடத்தி வரும் ஐந்து பேர் காளான் பிரியாணி கத்தரிக்காய் கூட்டு ஆகியவற்றை சமைத்து வைத்திருந்தனர்.

அங்கு சென்ற ராகுல் வெங்காய தயிர் பச்சடி தயார் செய்தார். பின் சமையல் கலைஞர்களுடன் அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்டார்.அப்போது அவர் சமையல் கலைஞர்களுடன் தமிழில் பேசி மகிழ்ந்தார். அந்த வீடியோவை சமையல் கலைஞர்கள் யு-டியூப் சேனலில் தற்போது பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஜன-202120:35:40 IST Report Abuse
Endrum Indian அம்மாடி இதிலியாவது உண்மையா வந்திச்சே. செஞ்சது தயிர் பச்சடி, அதிலேயும் பணியாளர்கள் கட் செய்த வெங்காயத்தை சட்டியில் போட்டு தயிர் ஊற்றி கல் உப்பு போட்டு ஒரு கிண்டு கிண்டிய பப்பு என்று சொல்லணும் ஆனால் எல்லா மீடியாவிலும் வருவது காளான் பிரியாணி தயாரித்து?????
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
31-ஜன-202119:03:43 IST Report Abuse
vbs manian இந்தியாவையே கிச்சடி செய்து விட்டார்கள்.
Rate this:
Cancel
NoBs - chennai,இந்தியா
31-ஜன-202117:10:56 IST Report Abuse
NoBs இதில் எல்லாம் மயங்கி ஓட்டுப்போட மக்கள் என்ன மாங்கா மடயங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X