பொது செய்தி

இந்தியா

இது உங்கள் இடம் : அது விவசாய போராட்டம் அல்ல!

Updated : ஜன 31, 2021 | Added : ஜன 31, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :கு.அருணாச்சலமூர்த்தி, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போராட்டத்தை, ஜனநாயக வழியில் நடத்துவதற்கு யாரும் தடை விதிக்கப் போவது இல்லை; ஆனால், அதையே சாதகமாக பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு எதிராக மாறும்போது, மக்களின் எதிர்ப்பை, போராட்டக்காரர்கள் சம்பாதிப்பர். புதிய வேளாண் சட்டத்திற்கு

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
கு.அருணாச்சலமூர்த்தி, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போராட்டத்தை, ஜனநாயக வழியில் நடத்துவதற்கு யாரும் தடை விதிக்கப் போவது இல்லை; ஆனால், அதையே சாதகமாக பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு எதிராக மாறும்போது, மக்களின் எதிர்ப்பை, போராட்டக்காரர்கள் சம்பாதிப்பர். புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக, டில்லியில் நடந்த போராட்டம், யாரால் துாண்டிவிடப்பட்டு, எதை நோக்கி செலுத்தப்பட்டது என்பது, குடியரசு தினம் அன்று வெட்ட வெளிச்சமாகி விட்டது. அந்த போராட்டம், வேளாண் சட்டத்திற்கு எதிராக நடக்கவில்லை; பிரிவினைகளால் நடத்தப்பட்டது.latest tamil newsமத்திய அரசு பேச்சு நடத்தினாலும் ஏற்பதில்லை; உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் மதிப்பதில்லை என, போராட்டக்காரர்கள் அடாவடியில் ஈடுபட்டனர். மேலும், நம் தேசத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், குடியரசு தினம் அன்று, டிராக்டர் பேரணி நடத்தினர். 'விவசாயி' போர்வையில் உள்ளே புகுந்த தேச விரோத சக்திகள், கலவரத்தை ஏற்படுத்தின. உச்சக்கட்டமாக, நம் செங்கோட்டையில், தேசிய கொடியை இறக்கி, பிரிவினைவாத கொடியை ஏற்றியுள்ளனர்; இதை, தேசபற்று உள்ள எந்த இந்தியனும் ஏற்க மாட்டார். இந்த விவசாயிகள் போராட்டம், விரைவில் பல மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபைத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அதை துாண்டி விட்டன.


latest tamil newsடில்லி கலவரத்தில், காலிஸ்தான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. இதற்கு பின்னும், அது விவசாய போராட்டம் தான் என, யாராவது கூறினால், அது முட்டாள்தனமாகவே இருக்கும்.இந்த போராட்டம் குறித்து ஏதும் தெரியாமல் ஆதரவு அளித்தோர் எல்லாம், இப்போது தெளிந்து விட்டனர். அதைவிட, போராட்டத்தில் ஈடுபட்ட சில விவசாய சங்கங்களும், 'வாபஸ்' வாங்கி கொண்டன.அன்று, முன்னாள் பிரதமர் இந்திராவின் உயிரை பறித்த காலிஸ்தானி பயங்கரவாதிகள், இன்றைய தலைவர்களையும் பலிவாங்க முயற்சிப்பர். அன்னிய சக்திகளுக்கு விலை போன மக்களால், இந்த தேசம் துண்டாடப்படும்.


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHIDAMBARANATHAN SHANMUGASUNDARAM - chennai,இந்தியா
31-ஜன-202122:10:48 IST Report Abuse
CHIDAMBARANATHAN SHANMUGASUNDARAM Government should not be ademant on repealing the three farm laws as our farmers are dying on the road such a long period.
Rate this:
Venkata Krishnan - Toronto ,கனடா
01-பிப்-202102:57:29 IST Report Abuse
Venkata KrishnanIf you are cunning,devious,profiteering ,treason and divisive then what would bring you to your senses?...
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
31-ஜன-202122:00:53 IST Report Abuse
Rajasekaran .......அவரது மருமகளும் என்று இருக்க வேண்டும் - என்னுடைய முந்தைய பதிவில்
Rate this:
Cancel
vsraj - COIMBATORE,இந்தியா
31-ஜன-202121:24:59 IST Report Abuse
vsraj பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டுகோள் : விவசாய போராட்டத்தின் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவியுங்கள். அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் அவர்கள் தயாரில்லை. மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் எதிர்கட்சிகளும் அடங்குவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X