அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்த 5 திரிணமுல் தலைவர்கள்

Updated : ஜன 31, 2021 | Added : ஜன 31, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 5 பேர், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அங்கு கட்சியை பலப்படுத்தும் வேலையில் பா.ஜ., மும்முரமாக உள்ளது.
TMC leaders, Rajib Banerjee,  Baishali Dalmiya, Prabir Ghoshal,  Rathin Chakraborti, Rudranil Ghosh,  BJP, amit shah, trinamool congress, amit shah, அமித்ஷா, பாஜ, திரிணமுல் காங்கிரஸ்

புதுடில்லி: திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 5 பேர், டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அங்கு கட்சியை பலப்படுத்தும் வேலையில் பா.ஜ., மும்முரமாக உள்ளது. திரிணமுல் காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் பலர் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் மே.வங்க அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகிய ரஜீப் பானர்ஜி, எம்எல்ஏ.,க்கள் பைசாலி டால்மியா, பிரபீர் கோஷால், ஹவுரா மேயர் ரதின் சக்கரவர்த்தி, முன்னாள் எம்எல்ஏ சாரதி சாட்டர்ஜி ஆகியோர் டில்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அமித்ஷா மேற்கு வங்கத்தில் இரண்டு நாள் பிரசாரத்தில் ஈடுபட இருந்தார். அப்போது ரஜீப் பானர்ஜி உள்ளிட்ட 5 பேரும் பா.ஜ.,வில் இணைவதாக இருந்தது. ஆனால், அமித்ஷாவின், மேற்கு வங்க பயணம் ரத்தானதை தொடர்ந்து அவர்கள் டில்லி சென்று பா.ஜ.,வில் இணைந்தனர்.


latest tamil news
ரஜிப் பாஜர்ஜி கூறுகையில், 'என்னை தொடர்பு கொண்ட அமித்ஷா, கட்சி கொடியை என்னிடம் நேரடியாக வழங்க உள்ளதாக தெரிவித்தார். இதனால், நான் டில்லிக்கு வருவதற்கு தனியாக விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார்,' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜன-202122:07:10 IST Report Abuse
முக்கண் மைந்தன் மம்தாஜீக்கி களையெடுக்கற வேலெ மிச்சம்
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
31-ஜன-202119:50:53 IST Report Abuse
suresh kumar எதிர் வீட்டுக்காரனிடம் கொண்டுபோய் கொடுத்தால் அவன் திருடன். ஆனால் அவனே, அதை என்னிடம் கொடுத்தால் உத்தமன் அவ்வளவுதான். சிம்பிள்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
31-ஜன-202117:28:16 IST Report Abuse
Nagarajan D மம்தா கூடாரம் காலி ஆகிறது.... விரைவில் அந்தம்மாவும் அந்த டெரிக் ஓ பிரைன் மட்டுமே இருக்கவேண்டும்... பிரகாவுது அந்தம்மாவின் திமிர் அடங்கினால் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X