அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேல் வாங்கியதில் என்ன தவறு?: ஸ்டாலின் கேள்வி

Updated : ஜன 31, 2021 | Added : ஜன 31, 2021 | கருத்துகள் (275)
Share
Advertisement
திருவள்ளூர்: 'நான் வேல் வாங்கியதில் என்ன தவறு இருக்கிறது' எனவும், 'சூரஹம்சம் செய்துவிடுவோம் என முதல்வர் பழனிசாமி பயப்படுகிறாரா?' என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.திருவள்ளூர் மாவட்ட மக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு எல்லா வகையிலும் கேடுகள் சூழ்ந்துவிட்டது. உரிமைப்பெற்ற,
திமுக, ஸ்டாலின், வேல், சூரஹம்சம், முதல்வர், பழனிசாமி

திருவள்ளூர்: 'நான் வேல் வாங்கியதில் என்ன தவறு இருக்கிறது' எனவும், 'சூரஹம்சம் செய்துவிடுவோம் என முதல்வர் பழனிசாமி பயப்படுகிறாரா?' என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட மக்களின் குறைகளை மனுக்களாகப் பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: அதிமுக ஆட்சியால் தமிழகத்திற்கு எல்லா வகையிலும் கேடுகள் சூழ்ந்துவிட்டது. உரிமைப்பெற்ற, உணர்வுள்ள, சுயாட்சி பெற்ற தமிழகமாக இல்லாமல் சொரணையற்ற, அடிமையாக, ஊழல் தமிழகமாக தான் இருக்கிறது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது, ஓ.பன்னீர்செல்வம் பொம்மை முதல்வராக இருந்து அரசை செயல்படாமல் முடக்கிவைத்தார். அதன்பின், தனது நாற்காலியை காப்பாற்றி, கொள்ளையடிப்பதற்காக முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சுயநல ஆட்சியை செய்தனர்.


latest tamil news
இருவரும் ஒன்றாக இருப்பதுபோல் இருந்தால் தான் சுருட்ட முடியும். அண்ணாதுரை மறைவிற்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் 184 தொகுதிகளில் வெற்றிப்பெற்று கருணாநிதி தலைமையில் ஆட்சியமைத்தோம். இதுவரை இந்தியாவில் இதுப்போன்ற மிகப்பெரிய வெற்றியை யாரும் கொடுக்கவில்லை. நான் வேல் வாங்கியதில் என்ன தவறு இருக்கிறது?. நாங்கள் கடவுளை அவமதித்தது இல்லை, கடவுளை நாங்கள் வெறுத்ததில்லை.


latest tamil news


சூரஹம்சம் செய்துவிடுவோம் என முதல்வர் பழனிசாமி பயப்படுகிறாரா? அதிமுக மட்டுமல்ல, பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இது இருக்கும். சுயநலமான இந்த ஆட்சியை அகற்றிவிட்டு உன்னதமான, ஒளிமயமான ஆட்சியை தமிழகத்திற்கு அமைத்து தருவேன் என உறுதியேற்கிறேன். வீட்டுக்கு விளக்காகவும், நாட்டுக்கு தொண்டனாகவும், மக்களின் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (275)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-பிப்-202111:52:35 IST Report Abuse
Swaminathan Chandramouli அப்படியே ஸ்டாலின் அவர்கள் மொட்டையடித்துக் கொண்டு வெள்ளி வேலை கையில் எடுத்துக்கொண்டு கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு வெற்றி வேல் , வீரவேல் என்று கூவுவாரா ? இவர் வெள்ளி வேலை கையில் ஏந்தி கோயிலுக்கு முன்னால் நின்று போஸ் கொடுக்கிறாரே அவர் நெற்றியில் திருநீறோ , குங்கும , சந்தனமோ அணிந்திருக்கிறாரா எப்படியோ எட்டு கிலோ வெள்ளி அவர் வீட்டில் உணவு அருந்தும்பிளேட் மற்றும் வெள்ளி டம்பளர்களாகவும் உரு மாறிவிட்டன
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
04-பிப்-202110:16:20 IST Report Abuse
thulakol அப்படியே ஒரு கோவணம் கொடுத்து இருக்கவேண்டும் தளபதி
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
03-பிப்-202122:08:38 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN இந்தப் புரோகிதர்கள் பூஜை செய்த வேல் ஆயிற்றே? அவர்கள் தான் திருமணங்களில் மணமக்களுக்கு இடையே நெருப்பு மூட்டி புகையைக் கிளப்பி ஆபாச மந்திரங்கள் ஓதுபவர்கள் ஆயிற்றே? அவர்கள் மந்திரம் சொல்லி கொடுத்த வேலை கையில் பிடிப்பது பகுத்தறிவு பெட்டகத்துக்கு கேவலம் இல்லையா? கடவுளை வெறுக்க வில்லை ஆனால் நம்புகிறீரா/ அதைச் சொல்ல தைரியம் உண்டா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X