வழக்கு விசாரணைக்கு முன்பு டிரம்பை கழட்டிவிட்ட வழக்கறிஞர்கள்!

Added : ஜன 31, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வாஷிங்டன்: கலவரத்தை தூண்டிவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான வழக்கு பிப்., 9-ல் செனட் அவையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவரது அணியிலிருந்து பல வழக்கறிஞர்கள் விலகியுள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து தேர்தலில் மோசடி என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார். பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்தார்.
Trump, Impeachment, Lawyers, LeaveTeam, டிரம்ப், வழக்கறிஞர்கள், விசாரணை

வாஷிங்டன்: கலவரத்தை தூண்டிவிட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிரான வழக்கு பிப்., 9-ல் செனட் அவையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவரது அணியிலிருந்து பல வழக்கறிஞர்கள் விலகியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்து தேர்தலில் மோசடி என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார். பல மாகாணங்களில் வழக்கு தொடர்ந்தார். அவற்றில் பெரும்பான்மையானவை தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அதிபர் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்த நாளில் டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை தாக்கினார்கள். டிரம்ப் அவர்களை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சமூக ஊடகங்கள் அவரை தடை செய்தன.


latest tamil news


கலவரத்தை தூண்டியதாக அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அவரது கட்சி உறுப்பினர்கள் 10 பேர் உட்பட 222 ஜனநாயக கட்சியினர் ஆதரவு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றினர். இதன் விசாரணை பிப்., 9-ல் செனட் அவையில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் டிரம்ப் அணியிலிருந்து முக்கிய வழக்கறிஞர்கள் விலகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவரை குற்றவாளியாக்கும் விசாரணைக்கு பதில், அடிப்படை ஆதாரமற்ற தேர்தல் மோசடி வழக்கில் டிரம்ப் கவனம் செலுத்தச் சொன்னதால் இம்முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற்றால் அடுத்த முறை அவரால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இருப்பினும் குடியரசு கட்சி செனட்டர்கள் டிரம்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக அவர் தவறு செய்துள்ளார் என்று கண்டிக்கலாம் என்று கூறியுள்ளனர். டிரம்புக்கு எதிரான நடவடிக்கை வெற்றி பெற இன்னும் 10-க்கும் மேற்பட்ட குடியரசு கட்சி செனட்டர்கள் ஆதரவு தேவை. அதற்கு சாத்தியமில்லை என்றே கருதுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
01-பிப்-202105:21:50 IST Report Abuse
Amal Anandan ஆனாலும் நம்ப ஊரில் ஒரு கூட்டம் இன்னும் ட்ரம்பை ஆதரிக்கிறார்கள், செய்திகளை வாசிப்பதேயில்லை போல.
Rate this:
Cancel
01-பிப்-202101:56:57 IST Report Abuse
ஆப்பு அப் கே பார் ட்ரம்ப் சர்க்கார்னு வாழ்த்துன வேளை. மனுசனுக்கு மரண அடி.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
31-ஜன-202121:31:43 IST Report Abuse
Loganathaiyyan கவலை வேண்டாம் டிரம்ப் இங்கு கபில் சைபல் முதல் பாவி சிதம்பரம் வரை இங்கு பல வழக்கறிஞர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் உங்ககளுக்கு நிச்சயம் உதவுவார்கள் கவலை வேண்டாம் பணத்தை விட்டெரியுங்கள் அவ்வளவே
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
01-பிப்-202105:22:39 IST Report Abuse
Amal Anandanவெட்கமேயில்லாம் அவர் தோற்றதும் கழட்டி விட்டுடீங்களே, அடப்பாவிகளா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X