மம்தாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: அமித்ஷா

Updated : ஜன 31, 2021 | Added : ஜன 31, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கோல்கட்டா: மோடி அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. ஆனால், மே.வங்கத்தில் மம்தா, தனது உறவினருக்காக ஆட்சி செய்து வருகிறார். மம்தாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து ஹவுராவில் பா.ஜ.,
Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி, mamata,  மம்தா,  மே.வங்கம், அமித்ஷா, உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜ, திரிணமுல் காங்கிரஸ், amitshah, homeminister,  smiritiirani, trinamool congress, trinamool, BJP,

கோல்கட்டா: மோடி அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. ஆனால், மே.வங்கத்தில் மம்தா, தனது உறவினருக்காக ஆட்சி செய்து வருகிறார். மம்தாவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.


latest tamil news



இதனையடுத்து ஹவுராவில் பா.ஜ., சார்பில் நடந்த தேர்தல் பேரணியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: மே.வங்க மாநில மக்களை முதல்வர் மம்தா தோற்கடித்து விட்டார். திரிணமுல் தலைவர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். தேர்தல் வரும் போது மம்தா தனித்து விடப்படுவார். மாநில மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். பல துறைகளில் மாநிலத்தை பின்னோக்கி தள்ளியுள்ளார். அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மோடி அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. ஆனால், மம்தா அரசு, உறவினருக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு அவுர் பேசினார்.


latest tamil news


இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், சுயநலத்திற்காக மத்திய அரசுடன் மோதலில் ஈடுபடுவதுடன், தங்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை அவமதிக்கும் கட்சியில் தேசபக்தி மிக்க ஒருவர், ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்கள். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது, பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு 8 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இங்கு திரிணமுல் தலைவர்கள் அதில் முறைகேட்டில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-பிப்-202110:59:23 IST Report Abuse
Malick Raja போலி என்கவுண்டர் குற்றவாளியே வெளியே உலவும்போது இதெல்லாம் சுஜூபி இல்லையா அமிதஜீ ..
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
01-பிப்-202107:39:11 IST Report Abuse
iconoclast வீரர் சுபாஷ் சந்திரா போஸை ஜெய் ஸ்ரீராம் என்று கூவினது யாரு? உங்க கூட்டம் தான்..
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
01-பிப்-202107:12:55 IST Report Abuse
Vijayan Singapore எல்லா தொப்பிகளும் ஒன்றா சேர்ந்து விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X