பிப்., 14ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி?

Updated : பிப் 01, 2021 | Added : பிப் 01, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை : பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், வரும், 14ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் இ.பி.எஸ்., 2020 டிசம்பர், 18ல், டில்லி சென்றார். பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார். அத்துடன், தமிழகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள பணிகளை திறந்து வைக்கவும், புதிய
PM Modi, Chennai Visit,  Tamil Nadu

சென்னை : பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், வரும், 14ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் இ.பி.எஸ்., 2020 டிசம்பர், 18ல், டில்லி சென்றார். பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார். அத்துடன், தமிழகத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ள பணிகளை திறந்து வைக்கவும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், தமிழகம் வரும்படி, பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்; பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.


latest tamil newsவரும், 14ம் தேதி, புதிய திட்டப் பணிகளை துவக்கி வைக்க, பிரதமர் மோடி, தமிழகம் வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயில் சேவை; இந்தியன் ஆயில் நிறுவனத்தின், துாத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை, பிரதமர் துவக்கி வைக்க உள்ளார்.மேலும், கல்லணை புனரமைப்பு திட்டம், பவானி ஆறு நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கும், பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாக,தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
01-பிப்-202110:52:29 IST Report Abuse
Sundar To reconfirm alliance with ADMK by making efforts to include Sasikala as general secretary in ADMK.
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
01-பிப்-202110:34:18 IST Report Abuse
தமிழன் வணக்கம் ஹே, திருக்குறள் ஹே...எனக்கு டமில் நாடு ரொம்ப புடிக்கும் ஹே இது தவிர என்ன சொல்ல போறார்? பாத்தாச்சு பாத்தாச்சு. வட நாட்டுலே நம்பிருவாங்க .. நாங்க தமிழர்கள் . GOBACK MODI
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
01-பிப்-202110:10:09 IST Report Abuse
Sankar Ramu வருக வருக தமிழகத்துக்கு விடிவுகாலம் பிறக்க வருக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X