அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேல் சர்ச்சை: எம்.பி., ஜெகத்ரட்சகன் பதிலால் அதிருப்தி

Updated : பிப் 01, 2021 | Added : பிப் 01, 2021 | கருத்துகள் (100)
Share
Advertisement
திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது; இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.இந்த விவகாரம், தி.மு.க.,வுக்குள்ளும் பிரச்னைகளை எழுப்பியுள்ளது. அந்த கட்சியின் எம்.பி., ஜெகத்ரட்சகன் தான், ஸ்டாலினுக்கு வேல் வழங்க ஏற்பாடு செய்தாராம். இது குறித்து, தி.மு.க., மூத்த தலைவர்கள் சிலர், ஜெகத்ரட்சகனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது; இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.



latest tamil news



இந்த விவகாரம், தி.மு.க.,வுக்குள்ளும் பிரச்னைகளை எழுப்பியுள்ளது. அந்த கட்சியின் எம்.பி., ஜெகத்ரட்சகன் தான், ஸ்டாலினுக்கு வேல் வழங்க ஏற்பாடு செய்தாராம். இது குறித்து, தி.மு.க., மூத்த தலைவர்கள் சிலர், ஜெகத்ரட்சகனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 'வீட்டிற்குள் வேல் வைத்திருக்கக் கூடாது என்கின்றனர். இதனால், தலைவருக்கு எதுவும் பிரச்னை வருமா' என, அவர்கள் கேட்டுள்ளனர். 'வேலை தண்ணீருக்குள் போட்டு விட்டால், எந்த பிரச்னையும் வராது' என, பதில் அளித்துள்ளார் ஜெகத்ரட்சகன். தேவையில்லாமல் இந்த விவகாரத்தை எழுப்பியதற்காக, ஜெகத்ரட்சகனிடம், சிலர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



ஜெகத்ரட்சகன், நாலாயிர திவ்ய பிரபந்த நூலுக்கு பொழிப்புரை எழுதியவர். பக்தியில் அதிக நாட்டம் உடையவர். தி.மு.க.,வுக்கு, ஹிந்துக்கள் மீது மரியாதை உண்டு என சொல்வதற்காக, ஒரு முறை திருப்பதியிலிருந்து பண்டிதர்களை வரவழைத்து, கருணாநிதி முன், ஸ்லோகங்கள் சொல்ல வைத்தவர். 'கட்சி தலைமையின் அனுமதி இல்லாமல், வேல் விவகாரத்தில், இவர் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை' என்கின்றனர்,


Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayyo paavam naan - chennai,இந்தியா
04-பிப்-202114:04:40 IST Report Abuse
ayyo paavam naan ஜெகத் ரட்சகன் ஒரு அரசியல் வாதி. அவர் தேர்தல் நேரத்தில் வெற்றி பெறுவதற்கும் கட்சியின் தலைமையின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் என்ன வேண்டுமானாலும் செய்வார் செய்துகொண்டு இருக்கிறார். ஆனால் "திருப்பதியில் இருந்து பண்டிதர்களை அழைத்து வந்து" கருணாநிதியின் முன்னாள் மந்திரம் ஓத சொன்னார் என்றால் இங்கு திருப்பதி பண்டிதர்களை தான் குற்றம் சொல்ல வேண்டு. காசுக்காக யார் முன் சென்று மந்திரம் ஓத வேண்டும் என்று இல்லையா? அசிங்கம்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-பிப்-202120:07:29 IST Report Abuse
r.sundaram வினை தீர்க்கும் வேல். ஆதலால் கந்தர் சஷ்டி கவசத்தை பழித்தவர்களை இதை சும்மா விடாது. அது மட்டுமல்ல, அதற்க்கு எதிர்ப்பு அல்லது மறுப்பு தெரிவிக்காமல் இருந்தவர்களையும் பழி வாங்கும்.
Rate this:
Cancel
sri - mumbai,இந்தியா
01-பிப்-202119:17:16 IST Report Abuse
sri ஜெகத்ரட்சகன் வைணவ பக்தர் நாலாயிர திவ்யா பிரபந்தத்தை ஆழ்ந்து படித்தவர். அவர் ஸ்தாலினுக்கு வேல் கொடுத்தால் அது நாராயணன் கையில் உள்ள வேலாகத்தான் இருக்கும் . திருப்பாவை 24 ம் பாசுரத்தில் .. வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி ... எண்டு சொல்லும் மகாவிஷ்ணுவின் வேலாயுதம் தான் அது. அந்த வேலாயுதம் உக்கிர ஆயுதமும் அல்ல. அடியார்களை போற்றி பாதுகாக்கும் ஆயுதம் . ஜெகத்ரட்சகனை பின்பற்றி ஸ்டாளின் விஷ்ணு பக்தனால் வேல் அவரை நல்வழிக்கு இட்டுச்செல்லும்
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
03-பிப்-202121:52:04 IST Report Abuse
கல்யாணராமன் சு.முதலில் ஜகத்ரட்சகன் இலங்கையில் சட்டவிரோதமாக முதலீடு செய்திருக்கும்/ செய்யவிருக்கும் 28000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யட்டும் ........ பிறகு எந்த கடவுளின் பக்தனாக வேண்டுமானாலும் இருக்கட்டும் .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X