புதுடில்லி: இன்று (பிப்.,1) தாக்கல் செய்யப்பட்ட 2021-2022ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சில முக்கியமான விவரங்களை இங்கு காணலாம்.

* பார்லி.,யில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நிர்மலா சீதாராமனுக்கு 3வது பட்ஜெட்டாகும்.
* மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்ச்சியான 8வது பட்ஜெட்.
* நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
* மொபைல் செயலி மூலம் பட்ஜெட் வாசிக்கப்பட்டது.
* டிஜிட்டல் முறையில் Union Budget என்ற மொபைல் செயலி வழியாகவே தாக்கல் செய்யப்பட்டது.
* இந்த Union Budget செயலியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார்.
* மக்களும் இந்த மொபைல் செயலி வழியாகவோ, indiabudget.gov.in என்ற வலைதளத்தின் வாயிலாகவோ பட்ஜெட் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

சிவப்பு
* வழக்கமாக பட்ஜெட் குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை சூட்கேஷில் எடுத்து வருவதே வழக்கம். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை தாக்கல் செய்த 2 பட்ஜெட்களின் போது, சிவப்பு நிற வெல்வெட் துணியில் வைத்து லெட்ஜராக எடுத்து வந்துள்ளார். அதேபோல் தான் இம்முறையும் சிவப்பு நிற வெல்வெட் துணியால் ஆன பையில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வந்துள்ளார்.