பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு

Updated : பிப் 01, 2021 | Added : பிப் 01, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்ததால், நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.,1) பட்ஜெட் தாக்கல் செய்தார்.
UnionBudget, Petrol, Diesel, Price, Budget2021, பெட்ரோல், டீசல், விலை உயர்வு, பட்ஜெட், வரி, வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி,

சென்னை: மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்ததால், நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் 81.71 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.,1) பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், இந்த கூடுதல் வரிவிதிப்பு நாளை முதல் அமலாகும் எனவும் தெரிவித்தார்.


latest tamil newsஇதனையடுத்து, நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து விலை உயர்வை அரசு தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil Kumar - chennai,இந்தியா
01-பிப்-202116:19:30 IST Report Abuse
Senthil Kumar பெட்ரோல் விலை ரூபாய் ஐயனுறு ,காஸ் விலை ஆயிரத்து ஐயனுறு அப்புறம் இருந்த நாடு வளர்ச் நோக்கி போகும் இல்ல சோ நீங்க மாதம் மாதம் பட்ஜெட் போடுங்க இந்த தேசம் நல்ல இருக்க நாம் தியாகம் செய்யனும் புரிஞ்சுதா -
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
01-பிப்-202115:57:36 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ குருடாயில் இன்று 56 டாலரில் இருக்கிறது பிஜேபி அரசு காங்கிரஸ் எண்ணைக்காக வாங்கிய பல லச்சம் கோடி டாலர் கடன்களை அடைத்து, எத்தையோ வெளிநாட்டு மிரட்டல்களை சமாளித்து இந்திய ரூபாயில் குருடாயில் வாங்கும் உரிமையை நிலைநாட்டி உள்நாட்டில் உள்ள அன்னிய செலவாணியைக் கரைக்காமல் பெட்ரோல் டீசல் வினியோகங்களை சமாளித்துவருகிறது. இதை எல்லாம் விட்டுபுட்டு, லச்சம் கோடிகள்ளல கச்சா எண்ணைக்காக அன்னிய செலவாணிய கரைச்சிகிட்டு கோடி டாலர்கள்ள கடனையும் வச்சி கச்சா எண்ணை வாங்கி பெட்ரோல் 40ரூவாக்கி கூட குடுக்கலாம், ஆனா பணவீக்கம் வந்து வீக்கம் வெடிச்சிரும், அப்புறம் வெனிசுலா மாதிரி ஒரு ரொட்டி வாங்க பைநிறைய பணத்தோட போவணும். கச்சா எண்ணைக்கி வாங்குன கடனை எல்லாம் அடைச்சி, நம்ம இந்திய ரூவாலியே கச்சா எண்ணை வாங்குற அதிகாரத்தையும் நிலைநாட்டி பணவீக்கத்தையும் கட்டுக்குள்ள வச்சா, நீங்க சொம்மா வம்படியா ஊர் சுத்துறத்துக்கு பெட்ரோல் விலைய விலைகுறைக்கிணுமாம். விலைவாசியை பாதிக்கும் துறைகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் எண்ணை கொடுத்துகொண்டுதான் இருக்கிறது (விவசாய மோட்டார்கள், அரசுசார் மற்றும் சாராத சேவை நிறுவனங்கள், எரி சக்தி துறைகள், போக்குவரத்து என பல). ஆனால் அன்று பெட்ரோல் 67ரூபாய் விற்பதற்கு காங்கிரஸ் அரசு பல லட்சம்காேடிகள் வளைகுடா நாடுகளுக்கு கடன்பட்டு மேலும் நம் உள்நாட்டு அன்னிய செலவாணியை கரைத்துக்கொண்டும் மற்ற மானியங்ளில் கைவைத்தும் நாட்டை திவால் நிலைக்கு கொண்டுசென்றுகொண்டிருந்தது, ஆனாலும் ஓட்டுவங்கிகளுக்காகவும் மாநில பெரும் சிறு குறு கட்சிகளின் மிரட்டல்களாலும் பெட்ரோல் விலைஏற்றத்தை தள்ளிவைத்து இந்தியாவை படுகுழியில் தள்ளிக்கொண்டிருந்தது மைனாரிட்டி காங்கிரஸ் அரசு, பெட்ரோல் விலையை குறைவாக வைக்க மறைமுக வரிகள் வேறு, மேலும் மற்ற துறைகளும் விழிபிதுங்கிக்கொண்டிருந்தன, பாதுகாப்புத்துறை படுமோசம், ஆயுதம் வாங்க காசில்லாமல் பாதுகாப்புத்துறை அமைச்சரே நாடாளுமன்றத்தில் நம்மால் ஒரு போர்விமானம் கூட வாங்கஇயலாது, பாக் போர்தொடுத்தால் 2 அரை நாட்கள் மட்டுமே தாக்குபிடிக்க இயலும் அதற்குள் உலகநாடுகள் வந்து சண்டையை தடுத்துவிடும் என்ற நம்பிக்கையில் மட்டுமே நாடு நடந்து கொண்டிருந்தது, எனவேதான் பாக் தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டிக்கறோம் என்ற ஈனமான முனகல் மட்டுமே பதிலானது. 70 வருட காங்கிரஸ் ஆட்சி காலி கஜானாவ குடுத்துட்டு போனாலும், தற்போது குருடாயிலுக்காக காங்கிரஸ் வாங்கிய இந்த லச்சம் கோடி கடன் தொகுப்புகளை மோடி அரசு அடைத்திருக்கிறது, மேலும் இந்திய ரூவாயில குருடாயில் வாங்குது, அன்னிய செலவாணிய கரைக்கில பதிலா மிச்சமாவுது, அதன் உபரி வருமானங்கள் நாட்டின் உள்கட்டமைப்பு, பாதுகாப்புக்கு, வலிமையான ஆயுதங்களுக்கு(ஊழல் இன்றி), நாட்டின் சேமிப்புக்குன்னு, பல நல்ல வழியில செலவழிக்கப்படுது, பாக் சீனா இரண்டிற்க்கும் இந்தியா ஒரே நேரத்தில் சேர்த்து எல்லையில் சவால்விடுகிறது, மாதக்கணக்கில் சீனாவுடன் ஆயுதங்களை எதிரில் நிறுத்துவச்சு மல்லுக்கட்டுது, போருக்கு தயார்னு எந்த உலகநாடுகளின் பின்னும் ஒளிந்துகொள்ளாமல் நெஞ்சு நிமுத்துது. ...................என்னை கேட்டால் பெட்ரோல் விலையினை நாட்டிற்க்கு நலம் தரும் வகையில் பின்வரும் வகையில வரையறுக்கவேண்டும். 2 வீலர்கள் 80 கிலோமீட்டர் குடுக்கும் வண்டிக்கு 100ரூக்கு பெட்ரோல், 45 கிலோமீட்டர் குடுக்கும் வண்டிக்கு 90ரூவாக்கு பெட்ரோல், வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு 200ரூ பெட்ேரால், உள்நாட்டு சொகுசுக்கார்களுக்கு 180ரூபாய்க்கு பெட்ரோல், வாடகை கார்களுக்கு 120ரூ பெட்ரோல், வீட்டுஉபயோக கார்களுக்கு 150ரூவா பெட்ரோல் என்று அந்த அந்த வாகனத்திற்கும் அவர்களின் வாங்கும் சக்தி தேவை அவர்களின் பயணத்தின் முக்கியத்துவம் என்று அது அதற்க்கு தக்கவாறு பெட்ரேல் விலை கொடுக்கவேண்டும். டோல் பாஸ்ட் டேக் போல இதுபோல வண்டிகளுக்கு ஸ்டிக்கர் கொடுத்து பங்குகளில் அதற்க்கேற்றவாறு கார்ட் டெபிட் சிஸ்டம் கொண்டுவரலாம். சரி தெரிஞ்தான் கேக்குறேன், குருடாயில உலகத்துக்கு இப்ப 56 டாலருக்கு விக்கிறானே சவுதி, அவனுக்கு அதுல அடக்கவெல எத்தினி? எத்தினி லாபம் வைக்கிறான்? அப்புறம் நாம அதை அவன் நாட்டுலேயிருந்து கப்பல்ல நம்ம நாட்டுக்கு கொண்டுவந்து அதை சுத்திகரிச்சி மத்திய கலால் மாநில கலால் எல்லாம் சேர்த்து பின் மானியங்களுக்கு கொடுக்கப்படும் எண்ணெய்களின் விலையைையும் இந்த பொது எண்ணையில் சேர்த்து பிறகு இடைத்தரகர்களை கடந்து வரும் பெட்ரோல் இப்போது 89 ரூபாய். சரி கிணத்துலேயிருந்து தண்ணி சேந்துறாமாதிரி எண்ணை எடுத்து உலகத்துக்கே குடுக்குறானே சவுதி, அவன் உள்நாட்டுல பெட்ரேல்பங்குல பெட்ரோல் குடுக்குற வெலை என்ன 2 ரூவாயா? இன்னைய தேதிக்கு சவுதி உள்நாட்டு பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், விலை லிட்டர் 36 ரூபாய் (இந்திய விலைக்கு). ஏன் அவன 25 அலாலா(சவுதி சில்லைறை நாணயப்பெயர் / 5ரூபாய் இந்திய மதிப்புக்கு)வுக்கு குடுக்கச் சொல்லவேண்டிதுதானே. அதைவிட்டுபுட்டு இந்தியா இத்தினி செலவும் செஞ்சு, கச்சா எண்ணைக்கி வாங்குன கடனை எல்லாம் அடைச்சி, இப்ப 40 ரூவாக்கி பெட்ரோல் குடுக்கோணுமா.
Rate this:
Cancel
sriram - Chennai,இந்தியா
01-பிப்-202115:53:01 IST Report Abuse
sriram பெட்ரோல், டீசல் விலையில் பட்ஜெட்டினால் எந்த மாற்றமும் இருக்காது. Agriculture cess போடப்பட்டுள்ளது. அனால் அதற்கு இணையான excise duty குறைக்கப்பட்டு உள்ளது. Cess விதிக்க முக்கிய காரணம், அந்த வரியை வேறு எதற்கும் பயன் படுத்த முடியாது விவசாய உள்கட்டமைப்பிற்கு (agricultural infrastructure) மட்டுமே பயன் படுத்த முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X