பொது செய்தி

இந்தியா

இந்த முறை புதிய வரி ஏதும் இல்லை நிம்மதி !

Updated : பிப் 01, 2021 | Added : பிப் 01, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
மத்திய பட்ஜெட்டில், புதிய வரிகள் இல்லாத நிலையில், சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டோர், வரிக் கணக்கு தாக்கல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் அசாம், மேற்கு வங்கம், கேரளாவுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கும் ஏராளமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. வழக்கம்போல்
இந்த, முறை, புதிய வரி,இல்லை , நிம்மதி

மத்திய பட்ஜெட்டில், புதிய வரிகள் இல்லாத நிலையில், சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டோர், வரிக் கணக்கு தாக்கல் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் அசாம், மேற்கு வங்கம், கேரளாவுக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கும் ஏராளமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. வழக்கம்போல் எதிர்க்கட்சிகள், மூக்கு விரியும் கோபத்துடன், இந்த பட்ஜெட்டை விமர்சித்துள்ளன.
மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், 2021 - 2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தனிநபருக்கு சலுகைகள் அளிக்காமல், நாட்டின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக மீட்கும் வகையில், சுகாதாரத் துறை மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருமான வரியில் பல சலுகைகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில், புதிய வரிகளை ஏதும் விதிக்காதது, அனைத்து தரப்பு மக்களையும் நிம்மதி அடையச் செய்துள்ளது.

நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறையை, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9.5 சதவீதமாக நிலை நிறுத்தும் வகையில், 34 லட்சத்து, 83 ஆயிரத்து, 236 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மிகவும் கடினமான பொருளாதார நிலை, வரி வசூல் குறைவு போன்ற நெருக்கடியான நேரத்தில், எதிர்காலத்தில் நோய்களால் ஏற்படும் உயிர் பலியை தடுக்கவும், அனைவருக்கும் உரிய சிகிச்சை வசதி கிடைக்கவும், சுகாதார துறைக்கான ஒதுக்கீடு, 137 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட், ஆறு துாண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் முதலில் இடம் பெறுவது, சுகாதாரம் மற்றும் உடல்நலன். கொரோனா தொற்று, ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ளது; 1.54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். அத்துடன் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பையும், கொரோனா ஏற்படுத்தியுள்ளது.எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலை ஏற்படுவதை தடுக்கவே, சுகாதார கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் இந்த பட்ஜெட்டில் தரப்பட்டுள்ளது.


latest tamil news

சட்டசபை தேர்தல்விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு, இந்த பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் திட்டங்களில், இந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.அசாம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில மக்களை கவரும் வகையில், இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் மட்டும், 2.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இவற்றில், தமிழகத்தில் மட்டும், 1.03 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதைத் தவிர, சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்டத்துக்கு, 63 ஆயிரத்து, 246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


விவசாய துறைமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், வரும், 2022 - 2023 நிதியாண்டுக்குள், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடன், இந்த பட்ஜெட்டிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.விவசாய கடன், 16.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, 10 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், 'எம்.எஸ்.பி., எனப்படும், குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்பதை உறுதி செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர்.
அது தொடர்பான சந்தேகத்தை போக்கும் வகையில், 'குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறையில் மிகப் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளோம். உற்பத்தி விலையை விட, 1.5 மடங்கு அதிகம் கிடைக்கிறது' என, தன் உரையில், நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.


latest tamil news

வரி கிடையாதுபுதிய வரிகள் மற்றும் வருமான வரிச் சலுகை இல்லாதபோதும், 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு, புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ள, 75 வயதுக்கு மேற்பட்டோர், இனி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, பொதுத் துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் விற்பனை மூலம், 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்டும் திட்டமும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள, வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்.இன்சூரன்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீட்டு வரம்பு, 49 சதவீதத்தில் இருந்து, 74 சதவீதமாக உயர்த்துவது என, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.பொருளாதாரத்தை மீட்பதற்காக, இலவசங்கள், சலுகைகள் அறிவிப்பதை விட, தொடர்ந்து நல்ல முன்னேற்றங்களை காணும் வகையில், விவசாயம், கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


எதிர்க்கட்சிகள் கோபம்பல்வேறு தரப்பினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள், பட்ஜெட்டை பாராட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் விமர்சித்துள்ளன. முன்னாள் மத்திய நிதி அமைச்சரான, காங்., மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளதாவது:இற்கு முன் இல்லாத வகையிலான பட்ஜெட் என, நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆம், இதற்கு முன் இல்லாத அளவுக்கு, மக்களை இந்த பட்ஜெட் ஏமாற்றியுள்ளது.

வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி என்ற புதிய வரியை, அவர் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் உட்பட பல பொருட்கள் மீது, இந்த வரியை அவர் விதித்துள்ளார். இது, பார்லிமென்டில் இருந்த எம்.பி.,க்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளை பழிவாங்கும் வகையில், இது அமைந்துள்ளது. இந்த வரியில் இருந்து, மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. அதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்தையும், நிதி அமைச்சர் முறியடித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது சிறப்பு நிருபர் -


தமிழகத்துக்கான அறிவிப்பு என்ன* தமிழகத்தில் ரூ. 1.03 லட்சம் கோடியில் புதிய சாலை திட்டம் (3,500 கி.மீ., தூரம்)

*சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ரூ. 63,246 கோடி ஒதுக்கீடு

* சென்னை உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும்.

*தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும்.

*தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
02-பிப்-202123:24:12 IST Report Abuse
PRAKASH.P இப்ப அறிவிப்பு.. அப்பறம் ஆப்பு...
Rate this:
Cancel
pazhaniappan - chennai,இந்தியா
02-பிப்-202119:47:07 IST Report Abuse
pazhaniappan போன பட்ஜெட்டில் மதுரை AIIMS மருத்துவமனைக்கு ஒதுக்கிய பணம் 1200 கூடி வந்துவிட்டதா? வாயிலேயே வடை சுடுவதை நிறுத்துங்கள் நீங்கள் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த (முந்தய தேர்தல்) பெட்ரோலிய பொருள்களின் விலை குறைப்பு வாக்குறுதியை நிறை வேற்றுங்கள், மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய GST நிலுவை தொகையை கொடுங்கள் பெரும் முதலாளிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்வது, ஸ்டிமுலுஸ் பேக்கஜ் என்ற பெயரில் வாரி வழங்குவதை நிறுத்துங்கள் அதுவே போதுமானது புதிதாக ஒரு...வேண்டாம் ,
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
02-பிப்-202116:29:12 IST Report Abuse
PRAKASH.P புது வரி போட்டாலும் குடுபதற்கு யாரிடமும் பணமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X