அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களின் கட்டமைப்பு வசதிகளுக்காக, மத்திய பட்ஜெட்டில் பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., ஆளும் அசாமில், அடுத்த மூன்று ஆண்டுகளில் சாலைப் பணிகளுக்காக, 34 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக, பா.ஜ., முயற்சித்து வருகிறது. ஆளும், திரிணமுல் காங்கிரசுக்கு கடும் போட்டியாக விளங்கி வருகிறது. அந்த மாநிலத்தில், 695 கி.மீ., துார நெடுஞ்சாலை அமைக்க, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதைத் தவிர, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தேயிலை தொழிலாளர்களுக்காக, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டமும், பட்ஜெட்டில் இடம்பெற்றுஉள்ளது.கேரளாவில், 2016 சட்டசபை தேர்தலில், ஒரு இடத்தில் வென்ற, பா.ஜ., இந்த முறை அதிக இடங்களில் வெல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்த மாநிலத்தில், 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலைப் பணிகள், பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.இதில் தமிழகத்துக்குதான், 'லக்கி பிரைஸ்' அடித்துள்ளது. ஆளும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, சட்டசபை தேர்தலை, பா.ஜ., சந்திக்க உள்ளது. பட்ஜெட்டில், தமிழகத்துக்கு, 1.03 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டு
உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE