முதல்வர் கனவுல இருக்காரு தலைவரு...

Updated : பிப் 02, 2021 | Added : பிப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பணி நிமித்தமாக, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். 44 வாரங்களுக்கு பின், மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் குறைகளை மனுக்களாக எழுதி, வரிசையில் காத்திருந்து, கலெக்டரை சந்தித்து, மக்கள் கொடுத்தனர்.கூட்டத்தை எட்டிப்பார்த்த சித்ரா, ''மித்து, எப்ப, குறை கேட்பாங்கன்னு இவ்ளோ நாளா காத்திட்டு இருந்திருப்பாங்க
 முதல்வர் கனவுல இருக்காரு தலைவரு...

பணி நிமித்தமாக, கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். 44 வாரங்களுக்கு பின், மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல் குறைகளை மனுக்களாக எழுதி, வரிசையில் காத்திருந்து, கலெக்டரை சந்தித்து, மக்கள் கொடுத்தனர்.

கூட்டத்தை எட்டிப்பார்த்த சித்ரா, ''மித்து, எப்ப, குறை கேட்பாங்கன்னு இவ்ளோ நாளா காத்திட்டு இருந்திருப்பாங்க போலிருக்கு; அறிவிப்பு வெளியிட்டதும் ஏகப்பட்ட பேரு வந்து மனு கொடுக்குறாங்க, பாரு,'' என்றாள்.

''அக்கா, மனு வாங்குறது பெரிய விஷயமல்ல; அதுக்கெல்லாம் தீர்வு கிடைக்கணும். மறுபடியும் அலைக்கழிச்சாங்கன்னா, எலக்சன் சமயத்துல, ஆளுங்கட்சி மேல அதிருப்தி உருவாகிடும்,''

''கொரோனா பரவிட்டு இருக்கறதா சொல்றாங்க; அப்புறம் எதுக்கு, மக்களை வரவழைச்சு, குறைகேட்பு கூட்டம் நடத்துறாங்க,''

''என்னக்கா, இப்படி கேட்டுட்டீங்க. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மாவட்டம் மாவட்டமா போயி, ஜனங்ககிட்ட மனு வாங்குறாரு. கலெக்டர் ஆபீசுல கூட்டம் நடத்தி, குறைகளை கேட்டுட்டா, எதிர்க்கட்சி கூட்டத்துக்கு போக மாட்டாங்கன்னு, ஆளுங்கட்சி தரப்பு கணக்கு போடுது,''

''அதெல்லாம் இருக்கட்டும், சட்டசபை தேர்தல் வரப்போறதுனால, அரசு அதிகாரிகளுக்கு 'டிரான்ஸ்பர்' கொடுக்குற வேலை ஆரம்பிச்சிடுச்சாமே,''

''ஆமாக்கா, மூணு வருஷத்துக்கு மேல, ஒரே இடத்துல பணிபுரியற அதிகாரிகள் 'லிஸ்ட்' எடுத்திருக்காங்க. ஆளுங்கட்சி தரப்புல சொல்ற வேலையை கனகச்சிதமா செய்றவங்களை 'டிக்' செய்து, முக்கியமான தொகுதிக்கு நியமிக்குறாங்க,''

''ஒவ்வொரு தொகுதிக்கும் எந்தெந்த அதிகாரி, தேர்தல் அலுவலரா இருப்பாருன்னு, அதிகாரப்பூர்வமா தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கு. அந்தந்த பதவிக்கு, ஆளுங்கட்சிக்கு சப்போர்ட்டா இருக்கறவங்களை நியமிக்க, காய் நகர்த்திட்டு இருக்காங்க,''

''எலக்சன் நெருங்குறதுனால, மக்கள் நலத்திட்ட உதவிகளை, விரைந்து செய்யணும்னு உத்தரவு போட்டிருக்காங்களாம். 'அம்மா' ஸ்கூட்டர் திட்டத்துல, பணம் பட்டுவாடா செய்யச்சொல்லி, மகளிர் திட்ட அலுவலர்களுக்கு, 'ஆர்டர்' போட்டிருக்காங்க. இருந்தாலும், கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள இருக்கற, நுாத்துக்கணக்கான பயனாளிகளுக்கு இன்னும் பணம் போயி சேரலையாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா, இப்ப, அரசாங்க உதவித்தொகையை வங்கி கணக்குல வரவு வைக்கச் சொல்றாங்க. காசோலையா கொடுக்குறதா இருந்தா, 'சம்திங்' வாங்கலாம்; கணக்குல வரவு வச்சா, கரன்சி வாங்க முடியாதே,''

''மித்து, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துல வேலை பார்க்குற, லேடி ஆபீசர், லஞ்சத்தொகையை இரட்டிப்பா உயர்த்திட்டாராம். அந்தம்மாவை, உயரதிகாரி கூப்பிட்டு, ஏம்மா, இப்படி பண்றீங்கன்னு கேட்டிருக்காரு,''''என்னுடைய சேப்டியை நான் பாத்துக்கிறேன்; உங்களை காப்பாத்திக்க வேண்டியது உங்க பொறுப்புன்னு சொல்லிட்டாராம். அந்த லேடி மேல, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கடிதம் பறந்திருக்கு. இதுவரைக்கும் நடவடிக்கை இல்லையாம்,'' என்றபடி, கலெக்டர் ஆபீஸ் பின்புறமுள்ள டீக்கடைக்கு சென்றாள் சித்ரா.

மரத்தடிக்கு கீழே கிடந்த நாற்காலியில் அமர்ந்து, இரண்டு மசாலா டீ ஆர்டர் கொடுத்த மித்ரா, ''500 ரூபாய் கொடுத்தா, புதுசா ரேஷன் கார்டே கொடுக்குறாங்களாமே,'' என, நோண்டினாள்.

''ஆமாப்பா, உண்மைதான். தெற்கு குடிமைப்பொருள் தாசில்தார் அலுவலகத்துல, செக்சன் ரைட்டரா, வெளியாட்களை வேலைக்கு வச்சிருக்காங்க. அவுங்க கிட்ட பணத்தை கொடுத்தா போதுமாம்; புரோக்கர் மூலமா வேலை கச்சிதமா நடக்குது; அலையாம ஈசியா புது ரேஷன் கார்டு கெடைக்குது. இதெல்லாம் உயரதிகாரி கவனத்துக்கு போகாம பார்த்துக்கிறாங்களாம்,''

''அடக்கொடுமையே, எந்த டிபார்ட்மென்ட்டிலும் கரன்சி இல்லாம வேலை நடக்காது போலிருக்கே,'' என, நொந்து கொண்ட சித்ரா, டீயை உறிஞ்ச ஆரம்பித்தாள்.

''அக்கா, ஈச்சனாரியில், 'டாஸ்மாக்' மதுக்கடை ஊழியர்கள் லஞ்சம் வாங்குனதா, ரெண்டு பேரை கைது செஞ்சாங்களே, மதுக்கடையில் லஞ்சம் வாங்க முடியுமா, என்ன? புரியலையே,''

''மித்து, பார் நடத்துறவங்க சொன்ன புகாரை வச்சு, கைது செஞ்சிருக்காங்க. கடைக்காரங்களுக்கும், பார் நடத்துறவங்களுக்கும் கொடுக்கல் - வாங்கல் தகராறு இருந்திருக்கு. இதுல, ஊழியர்களை சிக்க வச்சிட்டாங்க. விசாரணை நடத்திய அதிகாரிகள், பார்-ஐயும் இழுத்து மூடிட்டாங்களாம்,''

''மதுக்கடையில் இருந்து மாசந்தவறாம அதிகாரிகளுக்கு மாமூல் போறதுனால, கம்ப்ளைன்ட் சொன்னவங்க மேலேயே நடவடிக்கை எடுத்துட்டாங்க; இதெல்லாம் அநியாயம்னு, பார் ஊழியர்கள் சொல்றாங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

பின்இருக்கையில் அமர்ந்து கொண்ட மித்ரா, ''போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இன்னும் டி.எஸ்.பி.,யும் நியமிக்கலை; இன்ஸ்.,சும் நியமிக்கலையாமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாப்பா, லஞ்சம் வாங்குனப்ப, லேடி இன்ஸ்.,சை கையும் களவுமா கைது செஞ்சாங்க. அவருக்கு பதிலா இன்னும் புது இன்ஸ்., நியமிக்கலை. ஒரு எஸ்.ஐ., ரெண்டு போலீஸ்காரங்க மட்டும் இருக்காங்க. கடந்த ரெண்டு மாசமா, ஒரு வழக்குக்கு கூட எப்.ஐ.ஆர்., போடலையாம். கஞ்சா சேல்ஸ் நடக்குற இடங்களை பத்தி தெரிஞ்சும், கம்ப்ளைன்ட் வந்தாலும், நமக்கேன் வம்புன்னு கண்டுக்காம இருக்காங்களாம்,''

''அதேமாதிரி, தொண்டாமுத்துார் தொகுதி வி.ஐ.பி., ஏரியாங்கிறதுனால, எது நடந்தாலும், போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லையாமே,''

''யெஸ் மித்து, நீ கேட்குறது கரெக்ட் தான்! தொண்டாமுத்துார் ஏரியாவுல சேவல் சண்டை நடக்குது; மூணு நம்பர் லாட்டரி சேல்ஸ் சக்கைப்போடு போடுது. லாட்டரி வியாபாரிகளிடம் இருந்து, போலீசாருக்கு மாமூல் போறதுனால, எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லை,''

''கூலி தொழிலாளர்கள் பலரும் நகையை அடமானம் வச்சு, லாட்டரிக்கு அடிமையாகுற சம்பவம் நடந்துக்கிட்டு இருக்குது. ரூரல் எஸ்.பி., தொகுதிக்குள் ரோந்து வந்தா, நல்லாயிருக்கும்னு லேடீஸ் நினைக்கிறாங்க,'' என்றபடி, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டை கடந்து, ஸ்கூட்டரை முறுக்கிய சித்ரா, ''என்னப்பா, இதுவரைக்கும் அரசியல் மேட்டரே சொல்லலையே,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''அக்கா, கொங்கு மண்டலத்துல ஆளுங்கட்சி ஸ்ட்ராங்க்கா இருந்தாலும், சசிகலாவுக்கு ஆதரவா போஸ்டர் ஒட்டியதை பார்த்ததும், நிர்வாகிகள் பலரும் உள்ளூர பயத்துல இருக்காங்க. எலக்சன் நேரத்துல பலரும் அணி தாவிடுவாங்களோன்னு நினைக்கிறாங்க,''

''தி.மு.க., தரப்புல, மாவட்ட செயலாளர் ஒருத்தரு, தனக்குன்னு ஒரு வட்டத்தை உருவாக்கி, அதுக்குள்ளேயே சுத்திட்டு இருக்காராம்; மத்தவங்களை கண்டுக்கறதே இல்லையாம். இப்பவே, அமைச்சர் தோரணையில் நடந்துக்கிறதா, உடன்பிறப்புகள் புலம்பிட்டு இருக்காங்க,''

''சுந்தராபுரம் ஏரியாவுல ரெண்டு கோஷ்டியா கூட்டம் நடத்துனாங்களாமே,''

''ஆமாக்கா, மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் பக்கத்துல, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தலைமையில, உறுப்பினர் கூட்டம் நடந்திருக்கு. மகாலட்சுமி கோவில் பக்கத்துல, மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் கூட்டம் நடந்திருக்கு. இன்னும் தேர்தலே அறிவிக்கலை; அதுக்குள்ள கோஷ்டி, கோஷ்டியா பிரிஞ்சு நிக்குறாங்களே; எப்படி தேர்தலில் ஜெயிச்சு, ஆட்சியை கைப்பத்துறதுன்னு தெரியலையேன்னு, உடன்பிறப்புகள் நொந்து போயிருக்காங்க,'' என்றபடி, சரவணம்பட்டியை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள்.

''அக்கா, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவுக்கு, பிரியாணி கொடுத்த ஆளுங்கட்சி பிரமுகர், கோழிக்கடைக்காரருக்கு பணம் கொடுக்காம, பஞ்சாயத்து பண்ணுனாராமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''அது, மதுக்கரை ஏரியாவில் நடந்த சமாச்சாரம். 300 கிலோ கோழிக்கறி வாங்கியிருக்காங்க. பணம் கேட்ட, கடை உரிமையாளரை, போலீசாரை வச்சு மிரட்டியிருக்காங்க. கடைக்காரர், தி.மு.க., அனுதாபியாம்; பிரச்னை வேறுவிதமா வந்திடக்கூடாதுன்னு, விலையை குறைச்சு பேசி, செட்டில் பண்ணியிருக்காங்க,'''

'பிரச்னை, பெருசா வில்லங்கம் ஆகாம தடுத்திட்டாங்கன்னு சொல்லு,'' என்றபடி, ஷாப்பிங் மால் அருகே வண்டியை ஓரங்கட்டினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
07-பிப்-202111:27:11 IST Report Abuse
Malick Raja .. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திமுகவின் கடை மூடப்படும் என்றெல்லாம் கூவியவர்கள் .. திமுகாவுக்கு இரண்டு இடம் கிடைக்காது என்றவர்களுக்கெல்லாம் .. விழுந்ததோ மரண அடி.. இந்த தேர்தலில் கிடைக்கப்போவதோ மரண இடி .. பார்ப்போம் பொருத்திருந்து .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X